மீண்டும் சிக்கிய பாக்கியா.. இந்த முறை தலை தப்பிக்குமா..? ஓவர் எஸ்கேப் ஆகுறீங்க கோபி..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமி ராதிகா கேட்ட கேள்வியால் அதிர்ச்சியாகி விடுகிறார். எங்க அம்மா தான் புரியாம பேசுனா நீங்களுமா எனக் கேட்க நான் கோபியை கஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். ஆனால் அவர் இன்னும் பாக்கியா பின்னாடியே செல்கிறார் எனக் கூறுகிறார்.
இது தனக்கு இன்செக்கூர்ராக இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் அவருக்கு பெரிதாக பதில் சொல்லாமல் பழனிசாமி கிளம்பிவிடுகிறார். இதை தொடர்ந்து பாக்கியாவின் கேண்ட்டீனை கேட்டு வரும் ஆள் பொருட்காட்சி கேண்ட்டீனில் கூட்டம் கூடுவதை பார்த்து கடுப்பாகிறார். இதனால் அதை காலி செய்யவும் யோசிக்கிறார்.
இதையும் படிங்க: இனிமேதான் எங்க ஆட்டத்த பாக்கப் போறீங்க! அர்ச்சனா எடுத்த முடிவு – தோள்கொடுக்கும் விசித்ரா
இப்படியே போனா அடுத்த வருடம் இவருக்கே கிடைக்கும். அதனால் அழுகி போன உணவை கொடுத்து பாக்கியா கேண்ட்டீனில் இருந்து வாங்கியதாக சோஷியல் மீடியாவில் போட சொல்கிறார். ஆனால் பாக்கியா இதையெல்லாம் தெரியாமல் முதல் நாள் முடித்து விட்டு வீட்டுக்கு வருகிறார்.
வீட்டில் செழியன், எழில், ஈஸ்வரி அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். செழியன் அம்மாக்கிட்ட பேசுனியா எனக் கேட்கிறார். பேசுனேன். நல்லா போவதாக சொன்னதாக கூறுகிறார். விசிடிங் கார்ட் அடித்து வைத்து கொடுத்து இருக்கலாம் என செழியன் ஐடியா சொல்கிறார்.
இதையும் படிங்க: என்னடா ஹீரோ, ஹீரோயினை விட்டு நீங்களாம் ஜோடி ஜோடியா இருக்கீங்க.. சிறகடிக்க ஆசை அலப்பறை..!
வீட்டுக்குள் வரும் பாக்கியா சந்தோஷமாக பேசிவிட்டு ஈஸ்வரி வராதது தான் குறை என்கிறார். பின்னர் ரூமுக்குள் செல்ல இனியா பாக்கியாவிடம் சந்தோஷமாக பேசுகிறார். அவர் காலை பிடித்துவிட்டு ஐ லவ் யூ எல்லாம் சொல்கிறார். அடுத்து கோபிக்கு கால் வர பேச வெளியில் செல்கிறார்.
அங்கு பேங்க் ஆட்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவர்கள் உங்களுக்கு கொடுத்த டைம் எல்லாம் முடிந்து விட்டு எப்போ காசை கட்டுவீங்க என கறாராக கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ராதிகா அங்கு வந்து கொண்டு இருக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.