செழியன் பிரச்னைக்கு எண்ட் கார்ட் போட்ட பாக்கியா… ஆனா கோபிக்கு பிரச்னை ஆன் தி வே.. ஹப்பாடா..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜோசப் ரெஸ்டாரெண்ட்டில் மாலினியை செழியனுடன் பார்த்த விஷயத்தினை கூறுகிறார். இதை கேட்ட ஜெனி அதிர்ச்சியாகி அழுதுக்கொண்டே ரூமுக்குள் சென்று விடுகிறார். அதையடுத்து மரியத்திடம் இனி நம்ம பொண்ணு லைப்பில் செழியன் இல்லை என்கிறார் ஜோசப்.
மாலினியை பார்க்கில் வந்து பார்க்கிறார் பாக்கியா. பாக்கியாவையும் ஏமாற்ற பார்க்க அவர் நிறுத்து என முடித்து விடுகிறார். பின்னர் மாலினி வேண்டும் என்றே பிரச்னை செய்வதை ஒப்புக்கொள்கிறார். இப்ப உனக்கு என்ன தான் பண்ணனும் என்கிறார். என்னை செழியன் கல்யாணம் செஞ்சிக்கணும் என்கிறார்.
இதையும் படிங்க: சலார் பிரபாஸா இது!.. படத்துல பிரசாந்த் நீல் ரொம்ப பட்டி டிங்கரிங் பார்த்துருப்பாரு போல.. தப்பிக்குமா?
அப்போ ஜெனி அந்த குழந்தை வாழ்க்கை எனக் கேட்க அது பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. அப்போ உன் சுயநலத்துக்காக ஒரு குடும்பத்தை காலி செய்தாலும் பரவாயில்லை. இனி என் பையன் லைப்பில் நீ வரக்கூடாது. வந்தா நான் என்னை செய்வேனு தெரியாது என மிரட்டிவிட்டு செல்கிறார்.
இதையடுத்து செழியன் இனி ஜெனி வாழ்க்கையில் இல்ல. நான் லாயரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு ஜோசப் கிளம்புகிறார். அந்த நேரத்தில் பாக்கியா வீட்டுக்குள் வருகிறார். நீங்க ஏன் வந்தீங்க? என்ன பிள்ளையை பெத்து வச்சிருக்கீங்க எனக் கோபமாகிறார்.
நான் ஜெனிக்கிட்ட கொஞ்சம் பேசணும் எனக் கூறுகிறார் பாக்கியா. பின்னர் ஜெனியை அழைத்துக்கொண்டு போய் ரூமில் நடந்த விஷயங்களை உண்மையாக ஜெனியிடம் கூறுகிறார். உன்கிட்ட நான் சொல்லக்கூடாதுனு இல்ல. செழியன் சொல்லணும்னு நினைச்சேன். நான் உன்னை ஏமாத்திவிட்டதா நீ நினைச்சிட்ட என்கிறார்.
இதையும் படிங்க: ஷாக்கிங்.. அபிஷேக் பச்சன் வீட்டை விட்டே வெளியேறிய ஐஸ்வர்யா ராய்.. விவாகரத்து வதந்தி உண்மையானதா?..
அந்த பிரச்னைக்கு பின்னர் அவனுக்கும் மாலினிக்கும் எந்த காண்டக்ட்டும் இல்லை. இப்போ அவ தான் எதோ கேம் ஆடுறா. இனி நீ தான் ஒரு முடிவு எடுக்கணும். நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் உனக்கு தான் துணையா இருப்பேன் எனச் சொல்லிவிட்டு செல்கிறார். இதையடுத்து பேங்க் ஆட்கள் வீட்டுக்கு வர ஈஸ்வரி அவர்களிடம் விசாரிக்கிறார். கோபி நிறைய மாதமாக கிரெடிட் கார்ட் காசு கட்டவில்லை என்கின்றனர்.
அவர் அதிர்ச்சி ஆகி நிற்பதுடன் சரியாக அங்கே ராதிகா வர நீங்க சேவிங் ப்ளான் தானே கேட்க வந்ததா கோபி சொன்னாரு இப்போ காசு கட்டலை சொல்றீங்க எனக் கேட்கிறார். உடனே ஈஸ்வரி அதெல்லாம் கோபி காசு கட்டிடுவான் என உளறிவிடுகிறார். ராதிகா அதிர்ச்சியாகி விசாரிக்க நீங்க யார் என்கின்றனர். நான் அவர் மனைவி என்பதுடன் கோபியின் விஷயத்தை மொத்தமாக உடைத்து விடுகின்றனர். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
இதையும் படிங்க: கண்ணான கண்ணே சீரியல் ஹீரோவின் கள்ளக்காதல்… வந்தா எல்லாம் ஒன்னா பிரச்னைக்கு இறங்குவீங்களோ..!