More
Categories: Cinema News latest news television

பாசமழையில் ரொம்ப உருகுறீங்களே… ராதிகாவும், பாக்கியாவும் அக்கா, தங்கச்சி மாதிரியாம்..! கோபி கேட்டா என்ன ஆகும்?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பொருட்காட்சி தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. பாக்கியா குடும்பத்தில் இருந்து எல்லாரும் வந்து இருக்கின்றனர். ஆனால் ஈஸ்வரி வரலையே எனக் கவலையில் பாக்கியா இருக்கிறார். அப்போது செழியன் அங்கு வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து, பாக்கியாவுக்கு ஒரு கிப்ட் கொடுக்க பிரித்தால் உள்ளே வாட்ச் இருக்கிறது. எல்லாரும் பேசிக்கொண்டு இருக்க அங்கே ஜெனி வருகிறார். உள்ளே செழியன் இருப்பதை பார்த்து விட்டு வெளியில் கிளம்பிவிடுகிறார். உடனே அமிர்தா ஜெனியை பார்த்துவிட்டு அவரை கூப்பிட வெளியில் ஓடுகிறார். 

இதையும் வாசிங்க:அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதானா? சூர்யாவுக்கு வச்ச ஆப்பு

அவரை பார்த்து பாக்கியாவுக்கு கொண்டு வந்த கிப்ட்டை கொடுத்துவிட்டு ஆண்ட்டி கூப்பிட்டாங்கனு தான் வந்தேன். நான் கிளம்புவதாக சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இதை அமிர்தா வந்து பாக்கியாவிடம் சொல்ல அவர் ஜெனியை பார்க்க வெளியில் வருகிறார்.

அதற்குள் ஜெனி காரில் ஏறி கிளம்பி விடுகிறார். இதை தொடர்ந்து கேண்ட்டீனுக்கு வருகிறார் ராதிகா. உடனே பாக்கியா ஓடிப்போய் விசாரிக்க நான் பொருட்காட்சிக்கு தான் வந்தேன். பசிச்சுது சாப்பிட வந்தோம் என்கிறார். உடனே செல்வியை அழைத்த பாக்கியா அவர்களை பார்த்துக்கொள்ள அனுப்புகிறார்.

பழனிசாமி பாக்கியாவிடம் அவங்க உங்க லைப்பை வாழ்றாங்க. எப்படி அவங்களிடம் சகஜமா பேசுறீங்க எனக் கேட்க நான் இத்தனை உயரம் வந்ததுக்கே ராதிகா தான் காரணம். எனக்கு அவங்களை கல்யாணத்துக்கு முன்னவே தெரியும். நிறைய சப்போர்ட் தந்ததாக கூறுகிறார்.

இதையும் வாசிங்க:தமிழ் டைரக்டருக்கு நோ.. மலையாள டைரக்டரை லாக் செய்த யாஷ்.. படம் பேரு என்ன தெரியுமா?

இதனை தொடர்ந்து, பழனிசாமி ராதிகாவிடமும் இதை கேட்கிறார். அவரும் எனக்கு பாக்கியாவை முன்னவே தெரியும். அவங்க எனக்கு பிரச்னை வந்தப்பலாம் நிறைய துணையா நின்னுருக்காங்க. எனக்கு ஒரு அக்கா மாதிரி. முன்ன இருந்த பாசம் இருக்கா தெரியலை. ஆனா அவங்களை வெறுக்க முடியலை என்கிறார்.

ராதிகா, பழனிசாமியை பார்த்து நீங்களும் பாக்கியாவும் கல்யாணம் செஞ்சிக்களாமே எனக் கேட்டு ஷாக் கொடுக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Published by
Akhilan

Recent Posts