ஒரே நாளில் கேண்ட்டீன் காலியா..? அடேய் உங்க மொக்கைக்கு அளவு இல்லையா..!

by Akhilan |
ஒரே நாளில் கேண்ட்டீன் காலியா..? அடேய் உங்க மொக்கைக்கு அளவு இல்லையா..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியை பார்க்க பேங்க் அதிகாரிகள் வந்து காசை உடனே கட்டிவிட சொல்லி மிரட்டிக்கொண்டு இருக்கின்றனர். அதை ராதிகா பார்த்துவிடுகிறார். இதனை கோபி பார்த்து பேங்க் அதிகாரிகளை சமாளித்து அனுப்பி விடுகிறார்.

கடைசியாக இரண்டு நாளில் கடனை கட்ட வேண்டும். இல்லை வீட்டில் இருக்கும் பொருட்களை தூக்கி சென்று விடுவோம் என்கின்றனர். தொடர்ந்து ராதிகா வந்து அது பேங்க் ஆட்கள் தானே என்கிறார். ஆமாம் கிரெடிட் கார்ட் கேட்டு தொல்லை செய்வதாக சொல்கிறார்.

இதையும் படிங்க: அத மட்டும் செஞ்சால் என்னை வாழவைத்தவர்களுக்கு செய்யும் பாவம்! எதை பற்றி கூறினார் தெரியுமா ரஜினி?

உங்க பேங்க் தானே. பிசினஸ் மோசமாக போவது தெரியாதா எனக் கேட்க இப்போ கொஞ்சம் குறைஞ்சு இருக்கு எல்லாம் சரியாகும் என்கிறார். நாளை மயூவை பார்க்க போகலாம் எனக் கூறி வீட்டுக்குள் சென்று விடுகிறார். இதனிடையே பாக்கியா கேண்ட்டீனுக்கு வந்து கொண்டு இருக்கிறார்.

அப்போது கேண்ட்டீன் முன் கூட்டமாக இருக்க கடைக்கு ஆட்கள் என நினைத்து அருகில் போனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துவிட்டதாக ஒரு பேப்பரை நீட்டுக்கின்றனர். இதனால் அதிர்ச்சியாகி விடுகிறார் பாக்கியா. தொடர்ந்து, நான் செய்யவில்லை என அவர் சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை.

இந்த பிரச்னையை கிளப்பி விட்ட கோதண்டராமன் பிரச்னையை மீடியாக்கு சொல்லி நியூஸ் போட சொல்கிறார். இந்த விஷயம் வீட்டுக்கும் வந்து விட செழியன், ஈஸ்வரி என அனைவரும் பதறுகின்றனர். கோபி சந்தோஷமாக அவ்வளவு தான் பாக்கியா காலி என நினைத்து கொள்கிறார். ராமமூர்த்தி, செழியன் இதில் எதோ பிரச்னை இருப்பதாக நினைத்து பாக்கியாவை பார்க்க செல்கின்றனர்.

இதையும் படிங்க: ‘லால்சலாம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான்! ஏன் மிஸ் ஆச்சுனு தெரியுமா? நடிகை சொன்ன சீக்ரெட்

ஈஸ்வரி பாக்கியா அப்படி செய்ய மாட்டாலே என சாமி கும்பிடுகிறார். எழிலும், பழனிசாமியும் அரசு அலுவலகம் போய் யார் இந்த புகாரை கொடுத்தாங்க என விசாரிக்கின்றனர். கோதண்டராமன் புகைப்படம் கிடைக்க அவரை எங்கோ பார்த்த மாதிரி இருப்பதாக எழில் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story