பாக்கியாவுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த பிரச்னைகள்.. கோபிக்கும் அடுத்த பிரச்னை பார்சல்..! என்ன நடக்குமோ?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிசாமியை ஹோட்டலில் சந்தித்து மன்னிப்பு கேட்கிறார் பாக்கியா. உடனே பழனிசாமி, எவ்வளோ தான் ரொம்ப நெருங்கிய நட்பா இருந்தாலும் சொல்லாம பாத்தா பிரச்னை வரும்னு தெரிஞ்சிக்கிட்டதா சொல்கிறார்.
பாக்கியா இல்ல சார் அப்படி நடந்து இருக்க கூடாது என மன்னிப்பும் கேட்கிறார். இதே நேரத்தில் கோபி தன்னுடைய நண்பர் செந்திலிடம் புலம்பி கொண்டு இருக்கிறார். ராதிகாவும், பாக்கியாவும் தனக்கு தொல்லை தருகின்றனர். அதுப்போல கிரெடிட்கார்ட் ஆட்களும் இம்சை தருவதாக புலம்பி கொண்டு இருக்கிறார்.
இதையும் வாசிங்க:ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்!. ரெண்டுமே சூப்பர் ஹிட்!.. கெத்து காட்டிய நடிகர் திலகம்…
பாக்கியா அரசு அலுவலகம் சென்று பொருட்காட்சி குறித்து விசாரிக்க செல்கிறார். அங்கு இருப்பவ்ர்கள் பல மாவட்டத்தில் இருந்து வந்து இருப்பதாகவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். பியூன் வந்து நாளைக்கு நடக்கும் மீட்டிங்கில் தான் இதுகுறித்து முடிவு எடுப்பாங்க என்கிறார்.
இதை தொடர்ந்து பாக்கியாவை முகத்தினை மூடிக்கொண்டு ஒருத்தன் வழிமறிக்க செயின் திருடன் என பயந்து விடுகிறார். அவர் துணியை எடுத்ததும் தான் அது கணேஷ் என தெரிகிறது. பிரச்னையை முடிக்க 30 நாட்கள் டைம் கேட்டீங்க. இன்னும்12 நாளு தான் இருக்கு. அதுக்கு அப்புறம் நான் என்ன பண்ணுவேனே தெரியாது என மிரட்டி விட்டு செல்கிறார்.
இதையும் வாசிங்க:டி.எம்.எஸ் வேண்டாம்!.. இந்த பாட்டை அம்மு பாடட்டும்!.. எம்.ஜி.ஆர் சொன்ன பாடல் எது தெரியுமா?..
காண்ட்ராக்ட் வாங்கியவரை சந்திக்கும் பாக்கியா, பொருட்காட்சி ரத்து செஞ்சிட்டா கவர்மெண்ட் உங்களுக்கு கொடுக்கும் 1 லட்சம் காசை தருவீங்களா என்கிறார். அதெல்லாம் தர முடியாது. அது எனக்கு கொடுக்கும் காசு. நான் உங்ககிட்ட கொடுத்துட்டேன்.
லாபமோ, நஷ்டமோ நீங்க தான் அனுபவிக்கணும் என்கிறார். செல்வி என்னக்கா இப்படி சொல்லிட்டு போறாரு என்கிறார். துணிஞ்சு இறங்கிட்டோம். இனிமே நடக்கிறத சமாளிச்சு தானே ஆகணும் என பாக்கியா சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.