ஒருவழியாக மருமகளுக்காக மாமியாரை பகைத்து கொள்ளும் பாக்கியா… துணை நிற்கும் ராதிகா..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவுக்கு கால் செய்யும் அவர் அம்மா உங்களுக்கு நடந்தது என் பொண்ணுக்கும் நடந்துட்டு. உங்களை நம்பி தானே என் பொண்ணை அனுப்பி வைத்தேன். நீங்களே உங்க பையனுக்கு துணை போய் என் பொண்ணை ஏமாத்திட்டீங்கள என்கிறார்.
என் பொண்ணுக்கு பெரிய இடத்துல கல்யாணம் செய்ய நினைச்சோம். நீங்க சொன்னதால தான் செழியனுக்கு கல்யாணம் செஞ்சி கொடுத்தோம். இதனால் பேச முடியாமல் இருக்கிறார் பாக்கியா. நானே என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிக்கிறேன் எனக் கூறி போனை கட் செய்து விடுகிறார்.
இதையும் படிங்க: சந்திரமுகி 2 எஃபெக்ட்!.. முதல் நாளில் கல்லா கட்டாத ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. வசூல் இவ்ளோ தானா?..
ஜெனி அம்மா பேசியதை எல்லாம் கேட்டு உடைந்து போய் சமையலறையில் கீழே உட்கார்ந்து இருக்கிறார் பாக்கியா. அங்கு வரும் ராதிகா காபியை வைத்து விட்டு அவரும் அருகில் உட்கார்கிறார். ஆனால் எதுவுமே பேசவில்லை.
இதையடுத்து சமையலறையில் பாக்கியா சமைத்து கொண்டு இருக்கிறார். அங்கு வரும் செழியன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். உனக்கும் உங்க அப்பாவுக்கும் வித்தியாசமே கிடையாது. என் வாழ்க்கையில் யாரை வேணா மன்னிப்பேன். உன்னை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. மூஞ்சிலேயே முழிக்காத என்கிறார்.
இதையடுத்து ஹாலில் பேசிக்கொண்டு இருக்க ஈஸ்வரி நான் போய் ஜெனியை சமாதானம் செய்து கூட்டிட்டு வரப் போறேன் என்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நீயும் வரணும் என பாக்கியாவிடம் கூறுகிறார். ஆனால் அவர் திட்டவட்டமாக மறுத்துவிடுகிறார்.
இதையும் படிங்க: உயிருள்ளவரை உஷா கங்கா காலமானார்.. திரையுலகினரை துரத்தும் மாரடைப்பு பிரச்சனை.. பிரபலங்கள் இரங்கல்
ஜெனி ஏற்கனவே உடைஞ்சி போய் போயிருக்கா? இப்போ போய் எப்படி அவள கூப்பிட முடியும். ராமம்மூர்த்தியும் இந்த நிலைமைல ஜெனியை எப்படி கூப்பிடமுடியும். அவ கோபமா இருந்தா இந்த வீட்டில் இருந்து கோபப்படட்டும். நான் கூப்பிடத்தான் போறேன் என்கிறார்.
இதனால் கடுப்பாகும் பாக்கியா எப்படி அத்தை என்னை முடக்கி இந்த வீட்டுக்குள்ள வச்சிருக்க மாதிரி. ஜெனியையும் உள்ளே வச்சிக்கலாம் என நினைக்கிறீங்களா. அதுக்கு நான் ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன் என கோபமாக சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.