ஜவ்வா இழுக்காதீங்கப்பா.. சட்டு புட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க.. கல்யாணத்தை முடிச்சிவிடுங்க
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் முத்துவேல் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு வீட்டிற்குள் செல்கிறார். அப்போ வடிவுவுக்கு பாண்டியன் ஆறுதல் சொல்கிறார். எங்க நிலைமையை பாத்தீங்களா அண்ணே. நாங்க கனவுல கூட நினைக்கலையே என்று சொல்லி கதறுகிறார்.
அடுத்து, கோமதி மீனா சப்பாத்தி போட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போ மீனாவுக்கு செந்திலிடம் இருந்து கால் வர போய் பேசிவிட்டு வருகிறார். போனில் ராஜீ விஷயத்தை சொல்ல மீனா அதிர்ச்சியாகி விடுகிறார். பின்னர் நான் அத்தையிடம் சொல்றேன் என போனை வைக்கிறார். கோமதியிடம் வந்து ரூமுக்கு போகலாம் என அழைக்கிறார்.
இதையும் படிங்க: இதனாலதான் கேப்டன் ‘தூ’ன்னு துப்பினார்.. விஜயகாந்த் வீட்டிற்கு வரும் அஜித்!. இவரே சொல்லிட்டாரு..
வேலையை முடிச்சிட்டு போலாம் எனக் கூற முக்கால்வாசி வேலை முடிஞ்சிட்டு கால் வாசி தானே அவங்க பாத்துப்பாங்க அத்தை. நான் பாக்கியாவிடம் சொல்லி விட்டு வருகிறேன் என மீனா செல்கிறார். பாக்கியாவிடம் சொல்லிக்கொண்டு கோமதியை அழைத்து கொண்டு விறுவிறுவென ரூமுக்கு செல்கிறார்.
கோமதி என்ன விஷயம் எனக் கேட்க ரூமில் சொல்வதாக ஹோட்டல் வருகின்றனர். அப்போ கதிரும் சொல்ல இப்போ விஷயத்தினை சொல்லு எனக் கூற வாங்க ரூமுக்கு என அழைத்து போய் ராஜீ ஓடிப்போன விஷயத்தினை சொல்லி விடுகிறார். இதனால் கோமதி மற்றும் கதிர் அதிர்ச்சியாகி விடுகின்றனர்.
கோமதி அண்ணனை நினைத்து புலம்ப தொடங்குகிறார். அடுத்து, அமிர்தா பாக்கியாவிடம் செழியன் மாமாக்கிட்ட பேசுனீங்களா என பாக்கியாவை கேட்க இரு பேசிட்டு வரேன் எனத் தள்ளி போகிறார். காரில் ஜெனி தன் பெற்றோர்களுடன் வந்து கொண்டு இருக்க அவருக்கு பாக்கியாவிடம் இருந்து வாய்ஸ் மெசேஜ் வருகிறது.
இதையும் படிங்க: விஜயகாந்த் நடிக்க மறுத்த 15 திரைப்படங்கள்!.. அவருக்கு பதில் நடித்த நடிகர்கள் யார் தெரியுமா?..
குழந்தையை பத்திரமாக ஒப்படைப்பது என் பொறுப்பு என்கிறார். செழியன் கார் ஓட்டிக்கொண்டு இருக்க தூங்கி எழுந்திருக்கும் ஈஸ்வரி காரை நிறுத்து முகம் கழுவிக்கிறேன் என்கிறார். இறங்கி சுற்றி பார்க்க இந்த ரூட்டை நான் பார்த்ததே இல்லையே என்கிறார். மழையால வேற ரூட்டில் வந்ததாக செழியன் சமாளிக்கிறார்.
மாநாட்டுக்கு கிட்டத்தட்ட எல்லாத்தையும் சமைத்து வண்டியில் எடுத்து வைக்க சமைக்கும் பெண்கள் பாயாசத்தினை தப்பாக தூக்கி கீழே போட்டு உடைத்து விடுகின்றனர். பின்னர் முதல் வண்டியை அனுப்பி விட்டு தனியாக பாயாசம் வேறு செய்து வேற வண்டியில் அனுப்பி வைக்கின்றனர். கோமதி பாண்டியனுக்கு கால் செய்து அண்ணன் குடும்பத்தினை பற்றி விசாரிக்கிறார்.
கதிர் பழனிக்கு ஃபோன் போட்டு கண்ணன் கூடத்தான் ராஜீ போயிருப்பா என்கிறார். அய்யோ அவன் கூட வாழ விடக்கூடாது. கல்யாணம் செய்றதுக்குள்ள கூட்டிக்கிட்டு வரணும் என்கிறார். கதிர் தன் நண்பர்களை விட்டு தேட சொல்வதாக கூறுகிறார். ரூமுக்கு வரும் கண்ணன் ராஜீயிடம் அத்துமீற முயற்சி செய்கிறார். ஆனால் ராஜீ முரண்டு பிடிக்க அங்கே வாக்குவாதம் நடக்கிறது. இதனை வெளியில் இருந்து பாக்கியா பார்த்து கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: ஷூட்டிங் முடிஞ்சி மிட் நைட் வந்தாலும் கேப்டன் அதை செய்யாம தூங்க மாட்டார்!.. பிரேமலதா சொன்ன சீக்ரெட்!..