பழைய மாவ அரைக்க ஸ்டார்ட் பண்ணிட்டீங்களே… பாக்கியாவுக்கு ஆப்பு ரெடியாக்கிய கோபி…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா, செல்வி இருவரும் நிலாவை அழைத்துக்கொண்டு வாசல் வரை வருகின்றனர். உடனே செல்வி பிள்ளைகளை பாக்கணும் என நழுவ பார்க்க பாட்டிக்காக தானே இப்படி சொல்றீங்க. ஒழுங்க வாங்க என இழுக்க அதற்குள் ராமமூர்த்தி பார்த்துவிடுகிறார்.
எல்லாரும் வீட்டுக்குள் வர ஈஸ்வரி பாக்கியாவை கேட்கிறார். ஆனால் மினிஸ்டர் பார்க்க கூப்பிட்டாங்க அங்க போயிட்டு வருவாங்க எனச் சமாளித்து விடுகிறார். ராமமூர்த்தி எல்லாரும் சேர்ந்து வரவேண்டியது தானே எனக் கேட்க கூட வேலை பார்க்கிறவங்க ஊருக்கு போகலாம் சொன்னதால எங்களை அனுப்பி வச்சிடுச்சி எனச் சமாளிக்கிறார். பின்னர் ராமமூர்த்தி நிலாவிடம் விளையாண்டு கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: குடியை நிறுத்திய அஜித்! அதற்கு காரணமே இவர்தானாம்.. என்ன ஒரு நட்புபா?
சிறிது நேரத்தில் அங்கு கோபி, ராதிகா, இனியா மூவரும் வருகின்றனர். அவர்களை விசாரித்து கொள்கின்றனர். பின்னர் ஈஸ்வரி கோபியிடம் செழியனுடன் போனது பாக்கியா செய்த விஷயங்களை சொல்லி கோபப்படுகிறார். பின்னர், ராமமூர்த்தி கல்யாணம் நல்லா போச்சா எனக் கேட்க நின்றுவிட்டதாக கூறுகின்றனர்.
பொண்ணு ஓடிப்போயி கல்யாணம் செஞ்சிக்கிட்டா எனக் கூறிவிட்டு அதற்கு பாக்கியா தான் காரணம் என ஷாக் கொடுக்கின்றனர். அடுத்தவீட்டு விஷயம் நமக்கு எதுக்கு என நடந்த விஷயங்களை எல்லாம் கேட்ட ஈஸ்வரி உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் அமிர்தா கீழே இறங்கி வர அவரிடம் உண்மையை கேட்கிறார்.
இதையும் படிங்க: SK21 படத்துக்காக சிவகார்த்திகேயன் பட்ட பாடு!. படத்துல பாருங்க!.. ஜிம் டிரெய்னர் சொல்றத கேளுங்க!..
பின்னர் குன்னக்குடி விஷயத்தினை சொன்ன அமிர்தாவும் சொன்ன பயந்துடுவீங்க என்பதால் கூறவில்லை என சமாளிக்கிறார். இரவில் செழியனுக்காக கோபி காத்திருக்கிறார். அவர் வந்ததும் இருவரும் நலம் விசாரித்து கொள்கின்றனர். பாட்டி உனக்காக ஒரு விஷயம் பண்றாங்க நீ அவங்களுக்கு தானே சப்போர்ட்டா இருந்திருக்கணும்.
அதை ஏன் உங்க அம்மாக்கிட்ட சொன்ன அதனால் அவங்களுக்கு அவமானமா போச்சுல்ல. உங்க அம்மா பண்ணது தான் பெரிய தப்பு. உனக்கு பெரிய துரோகம் என்று ஏற்றி விடுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
இதையும் படிங்க: கூடவே இருந்து கட்சித்தாவிய நடிகை! கலைஞர் சொன்ன அந்த வார்த்தை – உண்மையிலேயே பெரிய மனுஷன்தான்