ஒருவழியா கல்யாணத்துக்கு ரெடி பண்ணிட்டாங்கப்பா!... சங்கமத்துக்கு எண்ட் கார்ட் வந்துடுச்சே…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராஜீயை கல்யாணம் பண்ணிக்க சொல்லுகிறார் கோமதி இதனால் கதிர் அதிர்ச்சி ஆகிறார். நீ என்ன செத்து போக கூட சொல்லுமா? நான் செத்து போறேன் என்கிறார். இருந்தும் கோமதி எங்க அண்ணன் குடும்ப மானத்தினை காப்பாத்து. நான் செஞ்சதுக்கு இது பிராயசித்தமா வரும் எனக் கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் கோமதி கதிர் காலை பிடித்து கதறிக்கொண்டு இருக்கிறார். என்ன அம்மா இது எனக் கதிர் கேட்க நீ ஓகே சொல்லாம, நான் எழுந்துக்க மாட்டேன் என்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் ராஜீயை கல்யாணம் செய்துக்க ஓகே சொல்லிவிடுகிறார் கதிர்.
இதையும் படிங்க: நானும் எம்.ஜி.ஆரும் பெரிய தப்பு பண்ணிட்டோம்!. பல வருடங்கள் கழித்து ரஜினியிடம் சொன்ன சிவாஜி..
பின்னர் ராஜீயிடம் வந்து கதிரை கல்யாணம் செய்துக்க சொல்ல அவர் முடியாது என்கிறார். அவனும் உன்னை விரும்பி கல்யாணம் செஞ்சிக்கப் போறது இல்லை. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்ட சொந்தக்காரவங்க ஒன்னுக்குள்ள ஒன்னா போயிடும். நீ ஒருத்தனை நம்பி நகையை ஏமாந்து விட்டதா போனா குடும்பம் தூக்கு போட்டு சாக தான் வேணும்.
அடுத்து எழில் இதில் கதிருக்கு சம்மதமா? நான் பேசவா எனக் கேட்க வேண்டாம் எனக் கூறிவிடுகிறார் பாக்கியா. பின்னர் கோயிலில் கல்யாணம் ஏற்பாடு செய்ய கோரிக்கை வைக்கிறார் கோமதி. அதற்கு பாக்கியாவும் சம்மதம் சொல்லுகிறார். இதைவிட ஒரு பெரிய விஷயம், என் மகனை பலியாடாக்க போறேன் என்கிறார்.
இதையும் படிங்க: செம வைலண்ட்டாக இருந்த ரஜினி!. அம்மாவை போல வந்து காப்பாற்றிய சமூக சேவகி.. ஆச்சர்ய தகவல்!..
பிறகு மீனா கதிரிடம் ஓகே இல்லாமல் பிடிக்காதவங்களை கல்யாணம் செஞ்சிக்குற எனக் கேட்கிறார். நான் பிடிச்சவங்களுக்காக தான் பண்ணிக்கிறேன். எங்க அப்பா என்னை அடிக்கிறப்ப ஓடி வந்து அதில் பாதி அடியை அம்மா தான் வாங்கிப்பாங்க என்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.