Categories: latest news

கோபிக்கு வேலை கொடுக்க ரெடியான பாக்கியா… கடுப்பில் இருக்கும் ராதிகா… இது நல்லா இருக்கே?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வரும் ராதிகாவிடம் என்ன பிரச்சனை எதுக்காக கோபியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாய் என ஈஸ்வரி  கேட்கிறார்.  ராதிகா உண்மையை சொல்லக்கூடாது என்பதற்காக ஒன்றும் இல்லை எனக் கூறி உள்ளே சென்று விடுகிறார்.

அதைத்தொடர்ந்து கோபியிடம் என்ன பிரச்சனை எதற்காக இத்தனை சண்டை என கேட்க ஒரு சின்ன பிரச்சனை தான்மா அதுக்காக காரில் இருந்து இங்கு வரை சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாள். இப்படியேதான் தொடர்ந்து செய்கிறாள்  எனவும் அப்பாவியாக கூறுகிறார்.  இதனால் கடுப்பான ஈஸ்வரி எழுந்து சென்று ராதிகாவை கீழே அழைக்கிறார்.

இதையும் படிங்க: ப்ளூ சட்டை மாறனுக்கு விடிவு காலம் பொறந்துடுச்சு!.. ஒருவழியா ஓடிடியில் ரிலீஸான ஆன்டி இண்டியன்!

அப்போ கீழே வரும் ராதிகாவிடம் எதுக்கு எப்ப பாரு அவன் கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்க,  இதனால்தான் அவனுக்கு நெஞ்சுவலி வந்தது எனவும் கூறுகிறார்.  இதைக் கேட்ட ராதிகா உங்க பையன் மட்டும் ஒழுங்கா என கேட்கிறார். அவனுக்கு என்ன அவன் ரொம்ப தங்கமான பையன் ரொம்ப நல்லவன் என தன் மகனுக்கு புகழாரம் சூட்டுகிறார் ஈஸ்வரி.

இதனால் கடுப்பான ராதிகா அப்போ ஆபிஸ் மூடுன விஷயத்தை உங்ககிட்ட சொன்னாரா?  எனக்கு சந்தேகம் வந்து அங்க போய் பார்த்தா பெரிய பூட்டு தொங்குது என உண்மையை போட்டு மொத்தமாக குடும்பத்தினர் முன் உடைக்கிறார். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஈஸ்வரி ஏம்பா இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லல என கவலையாக கேட்க அந்த பிசினஸ் வைத்து தான் நான் எல்லா விஷயங்களையும் செய்தேன். அதை மூடி விட்டதாக எப்படி உங்களிடம் சொல்ல முடியும் என கவலையாக சொல்கிறார். பின்னர் ஈஸ்வரி கிரெடிட் கார்டு விஷயம் நடந்தபோது அதை நீ சீக்கிரம் முடித்து விடுவனு  நம்பினேன்.

இதையும் படிங்க: வேட்டையன் வரார் வழிவிடுங்கோ!.. அந்த கெட்டப்பில் வெளியான ரஜினிகாந்த் வீடியோ.. செம வைரல்!..

ஆனால் இப்படி நடக்கும் என நான் நினைக்கவே இல்லை என ஈஸ்வரி கூற ராமமூர்த்தி மற்றும் செழியன் இதையெல்லாம் ஏன் எங்களிடம் சொல்லவில்லை என அதிர்ச்சியாக கேட்கின்றனர். அப்போ அங்கு வரும் பாக்கியாவிடம் கோபி இப்போ உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே என வம்பு இழுக்கும் படி பேசுகிறார். ஆனால் பாக்யா எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறார்.

 பின்னர் கிச்சனில் போன் பேசிக் கொண்டிருக்கும் கோபி யாரிடமும் வேலை கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போ அங்கு பாக்யா வருகிறார். அப்போதும் கோபி திமிராக பேச எனக்கு யார் கஷ்டத்தையும் நினைத்து சந்தோஷப்படும் புத்தி இல்லை என பதிலடி கொடுக்கிறார் பாக்யா. பின்னர் தன் ரெஸ்டாரண்டில் மேனேஜராக சேர்ந்து கொள்ளும்படி கேட்கிறார்.

 இதனால் அதிர்ச்சியாகும் கோபி என்ன பார்த்து எப்படி கேட்டுட்ட? உனக்கு கீழ நான் வேலை செய்யணுமா என அவரை இகழ்ச்சியாக பேசுகிறார். அப்போ அங்கு ராதிகா வர கோபி ராதிகாவை பாக்யா என்னை அவளுக்கு கீழ் வேலை செய்ய சொல்கிறாள் என கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

இதையும் படிங்க: செல்ஃபி, சால்வை!.. சாமானியர்கள்ன்னா இளக்காரமா சிவகுமார்?.. நறுக்கென கேள்வி எழுப்பிய பிரபலம்!..

Akhilan

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

6 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

8 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

9 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

21 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

22 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago