ஒருவழியா அடுத்த மகாசங்கமத்தை இழுத்துவிட்டாச்சே!... இதுவே வேலையா இருக்கே இவங்களுக்கு!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டுக்கு போனவர்கள் இன்னும் வீடு திரும்பாமல் இருப்பதால் அனைவரும் தவிப்பாக காத்திருக்கின்றனர். கோபி போன் பண்ணிருக்கலாம் எனக் கேட்க பண்ணாங்க வந்துட்டு இருக்கதா சொன்னாங்க எனவும் கூறுகிறார் ஈஸ்வரி.
அந்த நேரத்தில் சரியாக பாக்கியா வந்துவிட கோர்ட்டில் நடந்ததை கூறுகிறார். பின்னர் தனக்கு மினிஸ்டர் கொடுத்த ஆர்டரையும் கூற எல்லாரும் சந்தோஷப்படுகின்றனர். இதனை கண்ட கோபிக்கு கடுப்பாகிறது. அடுத்து ஜெனி வீட்டில் குழந்தைக்கு பேப்டிசம் வைக்க இருப்பதாக ஜோசப் சொல்கிறார்.
இதையும் படிங்க: ‘வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே’ பாடல் உருவானது இப்படித்தான் – இயக்குனர் சொல்றத கேளுங்க!..
இதை செழியனுக்கு சொல்லணும்ல எனக் கேட்க அவர் கடுப்பாகிறார். அந்த வீட்டில் இருந்து யாரும் வரக்கூடாது எனவும் சொல்லிவிட்டு செல்கிறார். அடுத்து பாக்கியா தன்னுடன் வேலை செய்தவர்களை அழைத்து மினிஸ்டர் ஆர்டர் கொடுத்த விவரத்தினை கூறுகிறார்.
மேலும் ரெஸ்டாரெண்ட் திறப்பது பற்றியும் பேசிக்கொண்டு இருக்க கோபிக்கு வயித்தெரிச்சல் ஆகிவிடுகிறது. அடுத்த வாரத்துக்கு மகாசங்கமம் லீட் கொடுக்கும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் இருந்து பாக்கியா வீட்டுக்கு வருகின்றனர். அவர்களை தன்னுடைய சித்தப்பா பையன் என்கிறார் ராதிகா.
அவர்கள் வந்து ராஜீ கல்யாணத்துக்கு அழைப்பு விடுகின்றனர். அப்போ பாக்கியாவை என்னவென்று சொல்வது ராதிகா முழித்துக்கொண்டு இருக்க ராமமூர்த்தி என் பொண்ணு எனக் கூறுகிறார். பின்னர் அவர்கள் திருமணத்துக்கு அழைத்துவிட்டு கிளம்புகின்றனர். இதையடுத்து பக்கத்து வீட்டு பெண் பாக்கியா வீட்டுக்கு வருகிறார்.
இதையும் படிங்க: விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..