அடேய் என்னங்கடா ஒரே எபிசோடுல எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டீங்க… எண்ட் கார்டா போட போறீங்க!..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அமிர்தா தொடர்ந்து அழுதுக்கொண்டே இருக்கிறார். ராதிகா மடியில் இருந்து வந்த நிலா அம்மா அழாதீங்க என கண்ணை துடைத்து விடுகிறார். தொடர்ந்து அங்கு வரும் இனியா இப்போ தான் தெரிஞ்சிக்கிட்டேன் எனக் கூற அமிர்தாவும் அழுகிறார்.
நிலா ஏன்மா அழுறீங்க எனக் கேட்க இல்லைடா என சமாளிக்கிறார். தொடர்ந்து இனியா நீங்க இங்க தான் அக்கா இருக்கணும். எங்களை விட்டு போக கூடாது எனக் கூற அமிர்தாவுக்கு சொல்ல முடியாமல் தொடர்ந்து அழுதுக்கொண்டு இருக்கிறார். அடுத்து ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியை சாப்பிட சொல்ல வருகிறார் பாக்கியா.
இதையும் படிங்க: நியூ இயர் பார்ட்டியில் அத்துமீறிய நடிகர்!.. பாதி படம் முடிஞ்ச நிலையில் நடிகை என்ன பண்ணாரு தெரியுமா?
அவர்கள் மறுக்க இல்லை மாத்திரை போடணும். இந்தாங்க என கஞ்சியை கொடுக்கிறார். கடைசியில் என் பிள்ளைங்க வாழ்க்கை இப்படியாகும்னு நினைக்கலை. நிலைகுழைந்து இருக்கேன் என உடைந்து அழுகிறார். உடனே ஈஸ்வரி என்னை மன்னிச்சிடுமா. நானும் தெரியாம பேசிட்டேன்.
கோபிக்கு நான் நினைக்கிறது மாதிரி தானே. நீயும் உன் பிள்ளைகளுக்கு நினைச்சிருப்ப. எல்லாம் சரியாகும் என சமாதானம் செய்கின்றனர். எழில் ரூமுக்கு வர ராதிகா, இனியாவை அழைத்து செல்கிறார். உடனே அமிர்தா, நான் உங்க வாழ்க்கையை கெடுக்க நினைக்கலைங்க. என்னால குடும்பமே கஷ்டப்படும் நினைக்கலங்க எனச் சொல்லி கதறுகிறார்.
எழில் அவர் உயிரோட இருக்க விஷயம் அவங்க அப்பா, அம்மாவுக்கே தெரியாது. உனக்கு எப்படி தெரியும்? நான் அதெல்லாம் நினைக்கல. ஆனா பயமா இருக்கு அமிர்தா. எனக்கு நீயும், நிலாவும் முக்கியம் என கவலையாக சொல்கிறார் எழில். இந்த நேரத்தில் கணேஷ் தன் வீட்டில் கத்திக்கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: கமலுடன் திருமணம் வரை சென்ற பிரபல நடிகை…! ஒற்றை கேள்வியால் அழிந்த காதல்..!
நீங்க பேசுனது ரொம்ப சரி. எல்லாரும் ஒன்னும் புரியாம இருந்தாங்க என்கிறார் ராதிகா. அங்கு வரும் பாக்கியா, அவங்க சொன்ன மாதிரி நீங்க பேசுனதால பெரிய பிரச்னை ஆகலை. இல்ல என்ன ஆகிருக்கும்னே தெரியலை. ரொம்ப நன்றி என்கிறார் பாக்கியா.
உடனே கோபி, நீ கவலைப்படாத. பசங்க வாழ்க்கையில் எதுவும் ஆகாது. எழிலுடன் அமிர்தா சந்தோஷமா வாழுவா என தைரியம் கொடுக்கிறார். பின்னர் ராதிகாவிடம் நான் எதுவும் தப்பா சொன்னனா எனக் கேட்க இல்லை என அவர் தலை ஆட்டுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.