More
Categories: latest news television

பாக்கியாவுக்கு அடுத்த கேண்ட்டீன் ஆர்டரா? இனி அந்த மகாசங்கமம் உருட்டுக்கு தானே இது!…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் இருந்து ஜெனியை அழைத்து செல்கிறார் செழியன். பின்னர் அதை பாக்கியாவிடம் சொல்ல எழிலை திட்டிக்கொண்டு இருக்கிறார். ஜோசப் கார் இல்லாத்தை பார்த்து எழிலை திட்ட வர பேசத்தான் கூட்டிட்டு போய் இருக்கான்.

பத்திரமா வீட்டுல விட்ருவான் என்கிறார். கோர்ட்டுல வச்சு கடத்தி இருக்கீங்க. புகார் கொடுக்கலாம் எனத் திட்டிவிட்டு செல்கிறார். செழியனை வண்டியை நிறுத்து எனக் கூறிக்கொண்டு வருகிறார் ஜெனி. ஒரு கட்டத்தில் காரை ஓரம் கட்ட ஜெனி இறங்கி நடக்கிறார். செழியன் சமாதானம் பேச அதற்கு ஜெனி எதுவுமே பேசாமல் இருக்கிறார்.

இதையும் படிங்க: டாக்டர் சொல்லியும் கேட்காம நடிச்சி ரத்த வாந்தி எடுத்த சிவாஜி!.. டெடிக்கேஷன்னா நடிகர் திலகம்தான்!..

பாப்பாவை மம்மிக்கிட்ட விட்டு வந்து இருக்கேன் என்றதால் வழியே இல்லாமல் அவரை வீட்டுக்கு அழைத்து செல்கிறார். இறங்கியதும் ஜெனி உள்ளே செல்ல போக அவரை மறித்து சமாதானம் பேச முயல்கிறார் செழியன். என்ன பண்ணட்டும் எனக் கேட்க செத்து போ எனக் கூறிக்கொண்டே அங்கு வருகிறார் ஜோசப்.

செழியனை அடிக்க போக சமாதானம் செய்து ஜெனி வீட்டுக்குள் அழைத்து செல்கிறார். பாக்கியாவுக்கு அமைச்சரை உடனே சந்திக்க வேண்டும் என்ற அழைப்பு வருகிறது. எழிலுடன் பார்க்க போகிறார். மினிஸ்டர் தன்னுடைய கட்சி கூட்டத்துக்கு கேண்ட்டீன் நீங்க தான் என ஆர்டர் கொடுக்கிறார்.

இதையும் படிங்க: விஜயா ஓவர்பில்டப்பா இருக்கே!… பெர்மான்ஸை குறைமா ஸ்ருதி!… சிறகடிக்க ஆசையின் அட்டகாசங்கள்

Published by
Akhilan

Recent Posts