Categories: latest newstelevision

ஒரு சைக்கோவ முடிச்சி விட்டாச்சு… அடுத்த சைக்கோ ஆட்டத்தை க்ளோஸ் பண்ண போறாங்களோ?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியா ஜெனிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். நீ என்ன முடிவு எடுக்கிறதா இருந்தாலும் யோசிச்சு எடு. முதலில் நாம அம்மா, பொண்ணு மாதிரி இருந்தோம். இப்போ பேசவே யோசிக்கிற நிலைமையா இருக்கு எனக் கலங்குகிறார். இதை கேட்ட ஜெனியும் வருத்தப்பட்டு கொண்டு இருக்க கதவு தட்டும் சத்தம் கேட்கிறது.

ஜெனி கதவை திறந்து பார்க்க ஜோசப் உன்னை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக கூறுகிறார். நான் யார் கிட்டையுமே பேசும் மனநிலையில் இல்லை என்கிறார். இவங்களோட பேசுனா உன் பிரச்னை தீர்ந்துடும் என்கிறார். யார் என்பதை பார்க்க ஜோசப்புடன் ஹாலுக்கு வருகிறார் ஜெனி. அங்கே மாலினி நின்று கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜி ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் நாகேஷா? போட்ட சவால் எல்லாம் போச்சே.. இது தேவையா?

இதனால் கடுப்பாகி உள்ளே செல்ல நினைக்கிறார் ஜெனி. ஆனால் ஜோசப் அதை தடுத்து அவளிடம் பேசு உன் பிரச்னைக்கு முடிவு கிடைக்கும் எனக் கூறுகிறார். இதை தொடர்ந்து மாலினி தன் பொய்களை அவிழ்த்துவிடுகிறார். எனக்கு செழியனுக்கு கல்யாணம் ஆன விஷயமே தெரியாது.

அவன் என்னையும் ஏமாற்றினான். உங்க விஷயம் தெரிந்து இருந்தால் நான் அவனிடம் பேசி இருக்கவே மாட்டேன் என்கிறார். இதனால் கலங்கும் ஜெனி இனி எதுவும் பேச வேண்டாம் என ரூமுக்குள் சென்று விடுகிறார். செழியன் பாக்கியாவுடனும், ஜெனி அவர் அப்பாவுடன் கோர்ட்டுக்கு வருகின்றனர். செழியனை சமாதானம் செய்து உள்ளே செல்ல சொல்கிறார் பாக்கியா.

இதையும் படிங்க: இவர் இந்த பாட்டை பாடக்கூடாது என அடம்பிடித்த சிவாஜி!.. டி.எம்.எஸ் உருவான கதை இதுதான்!..

இருவரும் கவுன்சிலிங் அறைக்கு செல்ல ஜெனி தன் முடிவில் ஆணித்தரமாக இருப்பதாக கூறுகிறார். ஆனால் செழியன் தான் தப்பு செய்துவிட்டேன். இந்த ஒருமுறை மன்னிக்க சொல்லுங்கள் என கையெடுத்து கும்பிடுகிறார். இதனால் கவுன்சிலிங் கொடுப்பவரும் இன்னும் 2 வாரம் கழித்து வரும்படி அனுப்பிவிடுகிறார்.

வெளியில் வரும் ஜெனி பாக்கியாவை பார்த்து உங்க மெசேஜ் கேட்டேன் ஆண்ட்டி. உங்களை எனக்கு பிடிக்கும். ஆனால் செழியன் பண்ணதை என்னால் மறக்க முடியாது எனக் கூறி செல்கிறார். காரில் கலங்கியப்படியே வரும் செழியனை சமாதானம் செய்கிறார் பாக்கியா. நான் எவ்வளவோ ட்ரை செய்றேன். ஆனா தொடங்கிய இடத்துக்கே இந்த பிரச்னை வருவதாக கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

5 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

8 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

9 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

24 hours ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

1 day ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago