கோபிக்காக துணை நின்ற பிள்ளைகள்… உங்க செண்டிமென்ட்டுக்கு ஒரு அளவே இல்லையா?

by Akhilan |
கோபிக்காக துணை நின்ற பிள்ளைகள்… உங்க செண்டிமென்ட்டுக்கு ஒரு அளவே இல்லையா?
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பார்க்கிற்கு கோபியை வாக்கிங் செல்வதற்காக அழைத்து வருகிறார் செழியன். பின்னர் செழியனை அனுப்பிவிட்டு தான் பின்னே வருவதாக கூறும் கோபி ஏதோ ஒரு சிந்தனையில் நடந்து வருகிறார். ஆனால் திடீரென அவர் தடுக்கி விழப்போக எழில் வந்து பிடித்து விடுகிறார். எழிலை பார்க்காத கோபி தேங்க்யூ சோ மச் என்கிறார்.

அவரோ என்னப்பா பார்த்து வர மாட்டீங்களா என கூறி அவரை அருகில் இருக்கும் பெஞ்சில் உட்கார வைக்கிறார். சூ லேஸ் கட்டாமல் விட்டதால்தான் தடுக்கி விட்டிருக்கு எனக்கூறி எழிலே அவருக்கு கட்டி விடுகிறார். பின்னர் எழில் ஜாக்கிங் சென்று விட செழியனுடன் வீட்டுக்கு திரும்புகிறார் கோபி.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரும் மிரட்டலான 7 படங்கள்!… ஹீரோவா ஹிட் கொடுப்பாரா!..

அவர் வந்தவுடன் ஈஸ்வரி அவரை அழைத்து உட்கார வைத்துப் பேசுகிறார். இந்த வீட்டிற்காக நீ நிறைய செய்திருக்கிறாய்? நீ இப்படி இருப்பதை என்னால் பார்க்க முடியலை. அதனால் இந்த நகைகளை வைத்துக்கொண்டு வேறு பிசினஸ் செய்து பிரச்சினைகளை முடித்துக்கோப்பா என ஈஸ்வரி கொடுக்கிறார். ராமமூர்த்தியும் வாங்கிக் கொள்ள சொல்கிறார்.

ஆனால் ராதிகா அவரே ஏற்கனவே உடைந்து போய் இருக்கிறார். இப்போ உங்களிடமும் செழியன் இடமும் காசு வாங்கினால் அது அவருக்கு மேலும் கஷ்டத்தை தான் கொடுக்கும். நல்ல விஷயத்தில் சந்தோஷப்படவும் கஷ்டத்தில் துணை நிற்கவும் தான் திருமணம் செய்து கொண்டோம். அவரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.

இதையும் படிங்க: கோபத்தில் கங்கை அமரன் என்னை பழிவாங்கினார்!.. டைம் பாத்து அடிச்ச கவிஞர் வாலி!..

பின்னர் கோபியை அழைத்துக்கொண்டு செல்லும் ராதிகா பாக்யா முன் நின்று அவரை யார் முன்னரும் கையேந்த விடமாட்டேன் என கூறிவிட்டு சென்று விடுகிறார். பின்னர் பாக்யா அமிர்தா சமையல் அறையில் இருக்க அங்கு வரும் எழில் ரெஸ்டாரன்ட் திறப்புக்கு அடித்திருக்கும் பத்திரிக்கையை காட்டி சந்தோஷம் கொள்கிறார்.

யாருக்கெல்லாம் பத்திரிகை கொடுக்க வேண்டும் என பேச்சு எழுந்து கொண்டிருக்க பாக்யா முதல் ஆளாக சீனியின் பெயரை கூறுகிறார். இதைக் கேட்ட ராமமூர்த்தி ஜெனி இப்போ இங்கே இருந்திருந்தால் சந்தோஷத்தில் துள்ளி குதித்து இருப்பாள் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Next Story