Categories: latest newstelevision

யோசிக்காமல் வாய் விட்ட கோபி… ஜெனி வீட்டில் ரகளை செய்த செழியன்.. கவலையில் பாக்கியா!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் சமையலறையில் நிற்கும் ராதிகா பாக்யாவிடம் கொஞ்சம் கடுகு கிடைக்குமா எனக் கேட்கிறார். பாக்யா எடுத்துக் கொடுக்க அதை வாங்கிக் கொள்ளும் ராதிகா நாளை தந்து விடுவதாக கூறுகிறார். இதை பார்த்து பாக்யா சிரிக்கிறார்.

உடனே ராதிகா புரியுது உங்க புருஷனையே கொடுத்துட்டீங்க கடுகு ஒரு விஷயமா என நினைக்கிறீங்களா என்கிறார். ஆனால் பாக்யா என்னை விட்டுப் போன எந்த விஷயத்தையும் நான் சின்ன அளவு கூட நினைப்பதில்லை என ராதிகாவுக்கு சொல்லி புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் கோபி கோபமாக இருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

என்ன விஷயம் என ராதிகா கேட்க ஹோட்டலில் ஜோசப்பை பார்த்த விஷயத்தையும் ஜெனிக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்து இருப்பதையும் மொத்தமாக போட்டு உடைத்து விடுகிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். உடனே ஈஸ்வரி கல்யாணம் பண்ணிக்கட்டும். ஆனா குழந்தையை நம்மிடம் கொடுத்திட வேண்டும் என்கிறார்.

இதைக் கேட்ட அதிர்ச்சியான செழியன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். பாக்கியா தடுத்து பார்த்தும் அவர் நிற்பதாக இல்லை. நேராக வண்டியில் ஜெனி வீட்டிற்கு வருகிறார். அப்போது ஜெனி வீட்டில் அவரை சாப்பிட சொல்லி மரியம் தொல்லை செய்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் கதவு தட்ட ஜோசப் கதவை திறக்கிறார். தடார் என உள்ளே நுழையும் செழியன், இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களா என சத்தம் போடுகிறார். மாப்பிள்ளையே பாத்தாச்சு இதை உங்க அப்பா உன்கிட்ட சொல்லலையா என்கிறார் ஜோசப். இதை கேட்டு ஜெனியும் அதிர்ச்சியில் நிற்க செழியன் என்னால யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என பிடிவாதம் பிடிக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

பின்னர், ஜெனியிடம் புரிய வைக்க பார்க்க ரொம்ப நடிக்காதே. மாலினி விஷயத்தினை ஜெனியிடம் சொல்லியதாக கூறுகிறார். இதனால் செழியன் அதிர்ச்சியில் நிற்க பிரச்சனை சண்டையாக மாறுகிறது. ஜோசப் ஒரு கட்டத்தில் செழியனை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார். ஜெனி மற்றும் மரியம் இருவரும் சேர்ந்து ஜோசப்பை வீட்டிற்குள் அழைத்து சென்று விடுகின்றனர்.

வீட்டில் பாக்யா பதட்டத்துடன் இருக்கிறார். ராமமூர்த்தி அவன் வந்திடுவான் நீ போய் படு என்கிறார். இல்ல மாமா அவன் ஜெனி வீட்டுக்கு போய் இருக்கானு எனக்கு பயமா இருக்கு என்கிறார். பின்னர் எழிலுக்கு கால் செய்து செழியனை பார்த்து விட்டு வரும்படி கூறுகிறார். எழில் போய் பார்க்க செழியன் சட்டை கிழிந்து புலம்பிக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago