என்ன அடுத்த கல்யாணமா? நீங்க உருட்டுறது முழுசுமே தேவையில்லாத ஆணி தான்!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியனை எழில் வீட்டுக்கு அழைத்து வருகிறார். வீட்டில் எல்லோரும் செழியன் காயத்துடன் வருவதை பார்த்து பதட்டம் ஆகின்றனர். அவரிடம் கேள்வி கேட்க அவர் அமைதியாகவே நிற்கிறார். எழில் ஜெனி வீட்ல நடந்த விஷயத்தை கூறுகிறார்.
இதனால் கோபி மற்றும் ஈஸ்வரி கோபத்துடன் கத்த தொடங்கி விடுகின்றனர். உடனே கோபி ஜோசப்புக்கு கால் செய்த அவனை அடிச்சிங்களா என்கிறார். அவனை எங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல அப்புறம் ஏன் அவங்க வரான் என்கிறார் ஜோசப்.
இதையும் படிங்க: அஜித் ஒரு சுயநலவாதி!. பெருசா உதவிலாம் பண்ணது கிடையாது!.. காமெடி நடிகர் பேட்டி…
என்ன ரவுடித்தனம் பண்ணிட்டு இருக்கீங்களா என கோபி எகிற அப்படி பண்றதா இருந்தா எப்பயோ அவன் கை கால உடைச்சு போட்டு இருப்பேன் என்கிறார் ஜோசப். இதனால் கடுப்பாகி அருகில் இருந்த ஈஸ்வரி ஃபோனை பிடுங்கி ஜோசப்பை சத்தம் போடுகிறார். ஒரு கட்டத்தில் உங்க பொண்ணு எங்களுக்கு வேணாம். எங்க வீட்டு பையன் மேல இப்படி கைய வச்சீங்க என கேட்கிறார் ஈஸ்வரி.
ஆனால் பாக்யா கொஞ்சம் பொறுங்க அத்தை செழியனும், ஜெனியும் சேர்ந்து வாழ வேண்டும் என அவரை ஆசுவாசப்படுத்துகிறார். உன்னை மாதிரி எல்லாம் என்னால பொறுமையா இருக்க முடியாது பாக்கியம் என்கிறார் ஈஸ்வரி. பின்னர் கோபி ஜெனி நமக்கும் வேணாம். செழியனுக்கு வேறு கல்யாணம் பண்ணலாம் என்கிறார். இதனால் செழியன் அதிர்ச்சியாக நிற்கிறார். ஈஸ்வரியும் இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்கிறார்.
இதையும் படிங்க: என்னங்கப்பா… ரோகினி நாலா பக்கமும் லாக்கை போடுறீங்க… ஆட்டம் சூடு பறக்கும் போலயே!
பின்னர் செழியன் ரூமில் அமர்ந்து அழுது கொண்டிருக்க அங்கு வரும் பாக்யா அவரை சமாதானம் செய்கிறார். நீ ஏம்பா அங்க போன, ஜெனி இப்பதான் மனசு மாறிகிட்டு வரா அதுக்குள்ள இது தேவையா என்கிறார். இதைக் கேட்ட செழியன் அழுவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms