என் கர்ப்பத்தை கலைக்க சொல்ல நீங்க யாரு? ஈஸ்வரியை தெறிக்கவிட்ட ராதிகா…
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ராதிகாவிடம் இந்த குழந்தை வேண்டாம் என்கிறார் ஈஸ்வரி. இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார். கோபிக்கு வளர்ந்த குழந்தை இருக்காங்க. உனக்கும் பொண்ணு இருக்கா? இப்போ இந்த குழந்தை வேண்டுமா என்கிறார். இதெல்லாம் சரியா வருமா எனக் கேட்கிறார்.
ராதிகா ஏன் சரியா வராது எனக் கேட்க ஜெனி, அமிர்தா இருக்காங்க. நாளைக்கு இனியாவுக்கு மாப்பிள்ளை வருவாங்க. அப்போ நீ இப்படி இருந்தா எப்படி கல்யாணம் நடக்கும். இதெல்லாம் நீங்க யோசிக்க மாட்டீங்களா என்கிறார். நான் எதுக்கு அதை யோசிக்கணும் எனக் கூறுகிறார்.
இதையும் படிங்க: அவங்களாம் இல்ல.. புது ’தக்’ இவரு தான்.. புதிய அறிவிப்பை வெளிட்ட தக் லைஃப் படக்குழு!…
இந்த குழந்தையை பெத்துக்கிறதா வேண்டாமானு நாங்க தான் யோசிக்கணும் என ராதிகா சொல்கிறார். நாங்க பெரியவங்க இருக்கோம். நாங்க முடிவெடுக்கலாம். அன்னைக்கு அமிர்தாவிடம் என்ன சொன்னீங்க. உங்களுக்கு ஒரு பிடிப்பு வேண்டும். உடனே கல்யாணம் செஞ்சிக்கோங்கனு சொன்னீங்கள. அது மாதிரி தான் எங்களுக்கும் பிடிப்பு வேண்டும் என்கிறார்.
கோபி என்ன பேசிக்கிட்டு இருக்கா இவ எனக் கேட்க ராதிகாவும் உங்க அம்மா என்ன பேசிக்கிட்டு இருக்காங்க என்கிறார். நான் ஏன் அவர் பிள்ளைகளை பத்தி யோசிக்கணும். என்னையும், கோபி மற்றும் மயூவை பத்தி தான் யோசிப்பேன் எனக் கூறுகிறார். திரும்ப திரும்ப குழந்தை பத்தி பேசாதீங்க. அப்புறம் நான் எதுவும் சொல்லிடுவேன் என வெளியில் அனுப்புகிறார்.
உடைந்து வந்து கிச்சனில் உட்காருகிறார் ஈஸ்வரி. என்ன ஆச்சு அத்தை எனக் கேட்க அவர் சொல்ல முடியாமல் இருக்கிறார். எனக்கு பாக்கியா கர்ப்பமா இருக்கும் விஷயம் தெரியும் அத்தை என்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் செல்வியும் இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். உனக்கு எப்படி தெரியும் என ஈஸ்வரி கேட்க அன்னைக்கே கண்டுப்பிடிச்சிட்டேன்.
இதையும் படிங்க: மல்லாக்க படுத்தா சுகமா இருக்கு!. பெட்ரூமில் ரிலாக்ஸ் பண்ணும் மாளவிகா!.. போட்டோஸ் உள்ளே!…
ராதிகாவிடம் கேட்ட போது அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. ஆனா யாரிடமும் சொல்ல வேண்டும்னு சொல்லிட்டாங்க என்கிறார். எப்படி நீ இதை சாதாரணமா எடுத்துக்கிற எனக் கேட்க கருத்து சொல்ற நிலைமைல நான் இல்லை. நீங்க உடம்பை கவனிச்சிக்கோங்க என எழுந்து செல்கிறார். ரூமில் ராதிகா கோவமாக அமர்ந்து இருக்கிறார்.
நாளைக்கே இந்த விஷயத்தினை நீங்க எல்லாருக்கும் சொல்லணும். நம்ம இருக்கோம் இல்ல அதெல்லாம் வேற விஷயம் எனக் கூறுகிறார். நாளை சொல்லிவிடுவதாக கோபி சமாதானம் செய்கிறார். மாடியில் துணிமடித்து செல்வியுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் பாக்கியா.
இதை எப்படி சாதாரணமா எடுத்துக்கிற அக்கா. நானா இருந்தா விஷம் வச்சு கொன்னுருப்பேன் என்கிறார். 25 வருஷமா நான் அவர்கூட வாழ்ந்தாலும் என்னைக்கு அவங்களை ஹாஸ்பிட்டலில் பார்த்தேனோ அன்னைக்கே எல்லாம் முடிஞ்சிது என்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: நீங்களாம் வேண்டாம்டா… அவங்க இருந்தா தான் தப்பிப்போம்… கலகலப்பு3 படத்தின் ஹீரோ இவர்கள் தானாம்…