உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு.. உண்மையை உடைத்த பாக்கியா..
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி குழப்பத்தில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்கிறார். என்ன பிரச்னை என ராமமூர்த்தி கேட்க அதெல்லாம் எதுவும் இல்ல. தண்ணி குடிச்சிட்டு வரேன் எனச் செல்கிறார். அங்கு எதிரில் வௌர்ம் ராதிகாவை பார்த்து கடுப்பாகி செல்கிறார்.
இதை பார்த்து ராமமூர்த்தி குழம்புகிறார். வீட்டுக்கு வரும் ராதிகா, கோபி அவங்க அம்மாவிடம் இந்த விஷயத்தினை சொல்லிட்டாரு. ஆனால் அவங்க குழந்தையை கலைக்க சொல்றாங்க என்கிறார். இதில் கடுப்பாகும் அம்மா, என்ன பொம்பள அது. நல்ல ஆளை கல்யாணம் பண்ணி இருக்க. யார் என்ன சொன்னாலும் உன் பிள்ளையை விட்ராதே.
இதையும் படிங்க:அய்யா நீங்க உண்மைய சொல்றதுக்குள்ள காசெல்லாம் மனோஜ் கரைச்சிடுவாரு போலயே!
முதல் வாழ்க்கை தான் போச்சு. இந்த வாழ்க்கையை விட்ராதே என்கிறார். வீட்டுக்கு வரும் கோபி, ஈஸ்வரிக்கு அருகில் வந்து அமர்ந்து விடுகிறார். ஆனால் அவர் பேசாமல் போக எழுந்து மாடிக்கு செல்ல போகிறார். ஆனால் நடுவில் ராதிகாவை நினைத்து புலம்பி கொண்டு இருக்கிறார். அப்போ பாக்கியா வந்து குருமா வேணுமா? தொக்கு வேணுமா என ஈஸ்வரியை கேட்கிறார்.
இதில் கோபி கடுப்பாகி இவ வேற என்கிறார். ரூமுக்கு போறதுக்கு பதில் அம்மா பக்கத்துலையே உட்கார்ந்துக்கலாம் என வந்து அமர்ந்து கொள்கிறார். அப்போ ராதிகா விஷயத்தினை சொல்லுங்க என்க அதெல்லாம் சொல்ல மாட்டான் என்கிறார் ஈஸ்வரி. ராமமூர்த்தி நீங்க மூணு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க எனக் கேட்கிறார்.
இதையும் படிங்க: அடுத்த பொண்ணு ரெடி!.. அக்காவை தொடர்ந்து அதிதி ஷங்கருக்கும் திருமணம் ஆகப் போகுதா?..
ராதிகா உங்க அப்பா எதோ முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும் சொன்னாரு. இனியா நீ போய் எல்லாரையும் அழைச்சிட்டு வா எனக் கூற அவரும் அழைச்சிட்டு வந்து நிற்கிறார். உங்க எல்லாரிடமும் எதோ முக்கியமான விஷயம் சொல்லணுமாம் கோபி என்கிறார் ராதிகா. இதை பார்க்கும் பாக்கியா பார்ப்கார்ன் வச்சு டைனிங் டேபிளில் ஸ்டைலாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டே வேடிக்கை பார்க்கிறார்.
எல்லாரும் என்ன விஷயம் என கோபியை தொல்லை கொடுக்கின்றனர். ஆனால் கோபி சொல்லமுடியாமல் தயங்கி நிற்கிறார். இனியா உங்களுக்கு தெரியுமா அம்மா என பாக்கியாவை கேட்கிறார். அந்த நல்ல விஷயத்தினை நான் சொல்றேன். உங்க அப்பா மறுபடியும் அப்பாவாக போறாரு என விஷயத்தினை போட்டு உடைக்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் நிற்க கோபி பாக்கியாவை பார்த்து முறைப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.