கோபியுடன் கிளம்பிய ஈஸ்வரி… கவலைப்படாமல் வழி அனுப்பி வைத்த குடும்பம்.. என்ன அடுத்த உருட்டா?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கோபி எவ்ளோ பெரிய விஷயம் செஞ்சிருக்கான் நீ என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்க என்கிறார் ராமமூர்த்தி. மத்தவங்க தான் திட்டுறாங்க நீங்களும் ஏன் அவனை திட்றீங்க என்கிறார் ஈஸ்வரி.
நீ அவனுக்கு சப்போர்ட் செஞ்சுக்கிட்டே இரு அவன் கூட உன்னையும் வெளியே போன்னு சொல்ல போறேன் என்கிறார். நீங்க என்ன சொல்றது நான் கோபி கூட போக தான் போறேன் என்கிறார் ஈஸ்வரி. ஆனால் ராமமூர்த்தி அப்படின்னா கிளம்பி போ. அப்பதான் உனக்கு பாக்கியா அருமையும் இந்த வீட்டோட அருமையும் புரியும் என்கிறார்.
அப்ப நான் எப்ப போவேனா காத்துகிட்டு இருந்தீங்களா என்னை ஈஸ்வரி கேட்க, நீ முடிவு பண்ணிட்டு மத்தவங்க மேல அந்த பழிய போடாத என திட்டிவிட்டு செல்கிறார். கோபியும் ராதிகாவும் கிளம்பி ஹாலில் வந்து நிற்கின்றனர். குடும்பத்தினர் வந்து நிற்க அம்மாவை அழைக்கிறார் கோபி.
இதையும் படிங்க: 2வது கல்யாணம் பண்ணியும் எனக்கு குழந்தையே இல்லை.. சுசித்ரா கணவர் கார்த்திக் குமார் வெளியிட்ட வீடியோ!
பாட்டி உள்ள இருப்பாங்க நாங்க சொல்லிக்கிறோம் நீங்க கிளம்புங்க என்கிறார் செழியன். மீண்டும் அவர் அம்மா என அழைக்க புரிஞ்சு போச்சு அடுத்த நாடகத்தை ஆரம்பித்துவிட்டார் என்கிறார் எழில். நீ கொஞ்சம் அமைதியா இருடா என கோபி அவர்களை அடக்க பெட்டியுடன் வெளியில் வருகிறார் ஈஸ்வரி. நீயா இதை டாடி பெட்டியா எனக் கேட்க இல்ல எங்க அம்மாவும் என் கூட வராங்க என்கிறார் கோபி.
இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியாக இருக்கின்றனர். செழியன் மற்றும் எழில் ஈஸ்வரியை சமாதானப்படுத்த முயல்கின்றனர். ஆனால் அவர் எந்த பதிலும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஈஸ்வரி முடிவு பண்ணிட்டா அவ போகட்டும் அமைதியாக இருங்க என்னை ராமமூர்த்தி மற்றவர்களை சமாதானம் செய்கின்றார். இவர்கள் கிளம்பி வெளியில் செல்லும் நேரத்தில் பாக்யா வருகிறார்.
இதையும் படிங்க: மத்தவங்க பேசட்டும்!.. எனக்கு வேலை இருக்கு!.. இளையராஜா வெளியிட்ட வீடியோ…
இனியா பாட்டியும் டாடி கூட போறாங்க என அவரிடம் கூறுகிறார். உடனே கோபி தன் மனதில் போகாதீங்க அத்தனை கெஞ்சி பாக்கியா. நீ கெஞ்ச கெஞ்ச அம்மா என்கூட வரது தான் எனக்கு சந்தோஷமா இருக்கும் என்கிறார். ஆனால் கொஞ்சமும் அசராமல் பாக்கியா தள்ளி நின்று வழி விட கோபிக்கு பல்பாகி விடுகிறது. ஈஸ்வரி என்னுடைய பிள்ளையை விட்டுட்டு என்னால இருக்க முடியாது என பேச போக நான் எதுவுமே கேட்கலையே என வாயை அடைக்கிறார் பாக்கியா.
அப்ப நான் எப்ப போவான்னு தான் நீ காத்துகிட்டு இருந்தியா என அவர் மீது பழியை போட கிராம மூர்த்தி நீ கிளம்புறதுக்கு பாக்கியா மேல பழி போடாத என திட்டி அனுப்புகிறார். இதை தொடர்ந்து ராதிகா மற்றும் கோபி இருவரும் தங்களுடைய வீட்டிற்கு வருகின்றனர். மாப்பிள்ளை மட்டும் வருவதை பார்த்த ராதிகாவின் அம்மா கோபி எங்கே என கேட்க பின்னால் வருவதாக கூறி உள்ளே செல்கிறார் ராதிகா. அப்போ கோபி தன்னுடைய அம்மா ஈஸ்வரியுடன் உள்ளே நுழைவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.