Connect with us

Cinema News

கோபியை வச்சு செய்யும் ராதிகா, ஈஸ்வரி… மீண்டும் புது பிரச்னையில் சிக்கிய பாக்கியா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியை பிடித்து ராதிகா திட்டிக்கொண்டே இருக்கிறார். அப்போ அங்குவரும் கமலா நானே வீட்டைவிட்டு போறேன் என்கிறார். இதனால் ஷாக்காகும் ராதிகா எங்க அம்மா என்கூடவே தான் இருக்கணும் என்கிறார். உடனே கோபியும் எங்க அம்மா என்னோட தான் இருக்கணும் எனக் கூறிவிடுகிறார்.

கமலா நானே போறேன். மயூவை பார்த்துக்க தான் வந்தேன். உங்க அண்ணனோட இருந்தா நிம்மதியா இருக்கலாம் என்கிறார். இதையடுத்து அவரை ராதிகா சமாதானம் செய்கிறார். கோபி எங்க அம்மா என்னோட தான் இருக்கணும் எனக் கூறிவிட்டு வெளியில் செல்கிறார். பக்கத்து ரூமில் இருக்கும் ஈஸ்வரி ராதிகா என்னை வெளியில் போக சொல்றாளா எனக் கேட்க அதெல்லாம் இல்லை என்கிறார்.

இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரை டிக் அடித்த அஜித்!.. எல்லாமே சிறுத்தை சிவா கையிலதான் இருக்கு!…

பக்கத்து ரூமில் பேசுன எல்லாமே கேட்டுச்சு என ஈஸ்வரி கூற நீங்க என்னை நம்பி வந்து இருக்கீங்கம்மா. உங்களை நான் பார்த்துப்பேன் என சமாதானம் செய்கிறார். கமலா ஹாலில் படுத்ததால் கால் வலி வந்ததாக கூற அவரை தன்னுடன் படுத்துக்க சொல்லி கோபியை ஹாலுக்கு தள்ளிவிடுகின்றனர். ஹாலில் படுத்திருக்கும் கோபி கவலையோடு இருக்கிறார். பாக்கியா ரெஸ்டாரெண்ட்டில் பக்கத்தில் பார் வருவதை நினைத்து வருத்தப்படுகிறார்.

அந்த ஓனர் வந்து பாக்கியாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது இங்கு பெண்களா வேலை செய்றோம். பார் வருவது பயமா இருக்கு என்கிறார். இதையடுத்து அந்த ஓனர் அப்போ ஹோட்டலை என்னிடமே கொடுத்துவிடுங்க என ஷாக் கொடுக்கிறார். வீட்டில் ஜெனி மற்றும் அமிர்தா இடையே சரியான பேச்சுவார்த்தை இல்லை என செல்வி பாக்கியாவிடம் கூறிவிட்டு செல்கிறார்.

இதையும் படிங்க: விஜய் போட்ட பக்கா மாஸ்டர் ப்ளான்! SK நினைச்சது வேறு.. அங்கு நடந்தது வேறு

அமிர்தாவிடம் கேட்கும் பாக்கியா, ஜெனிக்கு நான் வேலை செய்றது பிடிக்கலை. அதான் அவங்களே செய்யட்டும்னு விட்டேன் என்கிறார். ஜெனி கொஞ்சம் பாதிக்கப்பட்டு இருக்கா அமிர்தா. நாமதான் அவளுக்கு சப்போர்ட்டா இருக்கணும். இப்போதான் அவ பழைய நிலைமைக்கு திரும்பி வர அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கோ எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top