இப்ப அழுது யூஸ் இல்லம்மா ஜெனி… சும்மா போன ஓணானை இழுத்துட்டு வந்து அனுபவிக்கிறீங்களே கோபி…

by Akhilan |
இப்ப அழுது யூஸ் இல்லம்மா ஜெனி… சும்மா போன ஓணானை இழுத்துட்டு வந்து அனுபவிக்கிறீங்களே கோபி…
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி மற்றும் கமலா இருவரும் சண்டை போட்டு கொண்டு இருக்கின்றனர். அங்கு வரும் கோபி, என்ன பிரச்னை எனக் கேட்க காபியை தட்டிவிட்டுட்டாங்க என கமலா கூற இல்ல இவ பொய் சொல்றானு ஈஸ்வரி கூறுகின்றார்.

இப்படி மாற்றி மாற்றி குறை சொல்லிக்கொண்டே இருக்க கோபி ஈஸ்வரியை தன்னுடன் கிச்சனுக்கு அழைத்து செல்கிறார். வீட்டில் ஜெனி அழுதுக்கொண்டே இருக்கிறார். செழியன் அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்க அப்போ பாக்கியா அங்கு வருகிறார். குழந்தையை கொடுத்துவிட்டு என்ன ஆச்சு என்கிறார்.

இதையும் படிங்க: மழை பிடிக்காத மனிதன் டீசரிலும் இளையராஜா பாட்டு!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆண்டனி?..

செழியன் இன்னைக்கு நடந்த விஷயம் தான் எனக் கூறுகிறார். அது வெறும் விபத்து தான் ஜெனி. இதுல உன் தப்பு எதுவும் இல்லை என்கிறார். நான் எதுக்குமே லாயக்கு இல்லை. சமைக்க தெரியலை, வீட்டை பார்க்க முடியலை எனச் சொல்லி ஜெனி அழுதுக்கொண்டே இருக்கிறார். அதெல்லாம் எதுவும் இல்லை ஜெனி. லீகலான விஷயங்களை எனக்கு நீ தானே சொல்லி தந்து இருக்க இது உனக்கு செட்டாகாத வேலை என்கிறார்.

நீ இதை பத்தி எல்லாம் கவலைப்படாம இரு எனக் கூறி சமாதானம் செய்கிறார். பாக்கியா சென்றதும் எனக்கு என்னமோ ஆச்சு செழியன் என்கிறார். செழியன் உனக்கு எதுவும் ஆகலை. நான் தான் உன்னை இப்படி ஆக்கிட்டேன் எனக் கூறுகிறார். கிச்சனில் இருக்கும் கோபி அங்கிருப்பவர்களை திட்டிக்கொண்டே இருக்கிறார். வேலை எல்லாம் நானே தான் பார்க்கணுமா? நீங்களாம் எதுக்கு இருக்கீங்க என திட்டி தீர்க்கிறார்.

இதையும் படிங்க: பிரம்மாண்டத்தில் மயங்கி போன அஜித்! பழசுதானாலும் இவர விட்டா யாருமில்ல.. அட போங்கப்பா

ஈஸ்வரி தண்ணீர் கேட்க அவர் பாட்டிலை எடுத்து நீட்டுகிறார். இது இல்லை சுடுத்தண்ணி வேண்டும் என்கிறார். மாற்றி மாற்றி கோபிக்கு வேலை கொடுக்கிறார் ஈஸ்வரி. கோபி கிச்சனில் சொல்லிவிட்டு ஈஸ்வரியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். வந்தவுடனே கமலா மற்றும் ஈஸ்வரி இடையே மீண்டும் சண்டை நடக்கிறது. நான் ஒன்னும் என் பொண்ணை கல்யாணம் ஆனவனுக்கு கட்டிக்கொடுக்கலை என்கிறார்.

ராதிகா என்ன பேச்சு பேசுறீங்க எனக் கேட்க உண்மையை தானே சொல்றேன். அப்போ ராதிகா சண்டை போட துவங்க கோபி வருகிறார். கமலாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்ப சொல்கிறார். ராதிகா இது என் வீடு எனக் கூற நான் தான் முடிவு செய்யணும் எனக் கூறுகிறார். கோபி ஈஸ்வரியை அமைதிப்படுத்த என்னை ஏன் சொல்லுற? அவங்களை சொல்லு எனக் கோபியிடம் சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Next Story