சீரியல் பாக்குறதே நிம்மதிக்கு தான் இங்கையுமா? பாக்கியலட்சுமியில் திடீர் திருப்பம்
Bakkiyalakshmi: விஜய் டிவியின் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் வெளியாகி இருக்கும் சமீபத்திய புரோமோவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சில வருடங்களாகவே விஜய் டிவி தன்னுடைய சீரியல்கள் பிரபல சன் டிவி தொலைக்காட்சிக்கு கடும் போட்டி கொடுத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட சீரியல்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க: கோட் படம் விஜயிற்காக எழுதியது இல்லை.. இந்த நடிகருக்குதான் எழுதியதாம்…
இதில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு. ஏனெனில் கடந்த நான்கு வருடங்களாக இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பெரிய அளவில் வில்லத்தனம் இல்லாமல் எதார்த்தமான குடும்ப சூழ்நிலையை மையமாக வைத்து இந்த சீரியலின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ராவிற்கு ரசிகர்கள் அதிகம். அதே நேரத்தில் வில்லன் போன்ற ஆண்டி நாயகனாக இருக்கும் கோபி என்கிற சதீஷ்குமாருக்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம்.. கிட்டத்தட்ட சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அவர் நடிப்புதான் கூறப்படுகிறது. இரண்டாவது கல்யாணம், வளைகாப்பு என பல வித்தியாசமான டிராக்குகளைக் கொண்டது பாக்கியலட்சுமி.
இதையும் படிங்க: அஜித், விஜய்க்கு முந்தைய கால நடிகர்கள் ஒழுக்கமானவர்களா? புது பிரச்சினையை கிளப்பிய நடிகை
ஆனால் எந்தவித நெகட்டிவிட்டியும் இல்லாமல் சீரியலின் ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் கூட இந்த சீரியலில் தாத்தா கேரக்டரில் நடிக்கும் ராமமூர்த்தியின் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சீரியல் ரொம்ப பாசிட்டிவாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த தாத்தா இறந்ததாக காட்டப்படுகிறது. இந்த அதிர்ச்சியான தருணங்களை பார்த்து ரசிகர்கள் விரைவில் பாக்கியலட்சுமி முடிவுக்கு தயாராகி விட்டதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.