latest news
இதுக்கு இல்லையா சார் எண்ட்டு… பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்
Bakkiyalakshmi: விஜய் டிவியின் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி குறித்த தகவலால் ரசிகர்கள் செம கடுப்பாகி இருக்கின்றனர்.
விஜய் டிவியில் தற்போது டாப் டிஆர்பியில் இருப்பது என்னவோ மூன்று சீரியல்கள் தான். இதில் முக்கிய இடம் பிடித்து இருக்கிறது பாக்கியலட்சுமி. கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் முதலில் அதிகாரப்பூர்வ ரீமேக் என்று தான் கூறப்பட்டது. ஆனால் பின்னர் தமிழுக்கென தனி ரூட் பிடித்தது.
பிரபல தமிழ் நடிகைகளான கஸ்தூரி, பிரியா ராமனிடம் பாக்கியாவாக நடிக்க கேட்க அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் தான் நடிகை சுசித்ரா உள்ளே வந்தார். தற்போது அவர்தான் கதைக்கு சரியான பொருத்தம் என்னும் நிலை உருவாகி இருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினி மகளா இது? இவ்ளோ குண்டாயிட்டாங்க.. சத்தியமா நம்ப முடியல
குடும்ப தலைவியின் வளர்ச்சிதான் கதையென எனக் கூறப்பட்ட நிலையில் பாக்கியா தற்போது ரெஸ்டாரெண்ட் ஓனராக இருக்கிறார். இன்னும் கதை இழுக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து கோபியின் இரண்டாம் கல்யாண கதையை வைத்து சிறிது நாட்கள் இழுத்தார்.
இதை தொடர்ந்து, செழியன் மற்றும் எழில் வாழ்க்கையில் புயலை கிளப்பிவிட்டனர். அந்த கதையையும் முடித்துவிட்டனர். அதை தொடர்ந்து இனியாவுக்கு பிரச்னையை பரப்பிவிட அதுவும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ராமமூர்த்தி கேரக்டரை முடிவுக்கு வந்துள்ளது. இந்த வாரம் முழுவதும் அவரின் இறுதி ஊர்வலம் குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிளாக்ல டிக்கெட் வித்து சிக்கிய நடிகர்… டிக்கெட்டே கிடைக்காமல் திரும்பிய விஜய்…!
ஆனால் ராமமூர்த்தி இறந்தபின்னர் பாக்கியலட்சுமிக்கு பெரிய கதைகள் இல்லாமல் இருக்கிறது. இதனால் தொடர்ந்து இந்த கதையை இழுப்பது ரசிகர்களுக்கு பெரிய கோபத்தினை தான் ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.