பாக்கியாவுக்கு நேரம் சரியில்லை போல… காண்ட்ராக்ட்டில் வந்த பிரச்னை.. கோபி சபதம் ஜெயிச்சிட்டோ..?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் இனியா காலேஜுக்கு ஒரு ட்ரெஸ் எடுக்கணும் எனக் கேட்கிறார். நாளை எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அது முடிச்சிட்டு வந்து எடுத்து தருவதாக கூறுகிறார். இதையடுத்து அடுத்த நாள் காலையில் எழிலுடன் பாக்கியா காண்ட்ராக்ட் எடுக்க கிளம்புகிறார்.

ஈஸ்வரி காசை பறிகொடுத்துருவனு பயமா இருக்குமா என்கிறார். கவலைப்படாதீங்க அத்தை. கண்டிப்பா காண்ட்ராக்ட் கிடைக்கும் என நம்பிக்கையுடன் கிளம்பி செல்கிறார். அரசு அலுவலகத்தில் அப்ளிகேஷனை கொடுத்துவிட்டு காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டத்தை கொடுத்தது யார் தெரியுமா? எந்த நடிகருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலையே!..

இனியா பாக்கியாவுக்காக காத்திருக்கிறார். அப்போ அங்கு வரும் ராதிகா தான் ட்ரெஸ் எடுக்க கூப்பிட்டு போவதாக சொல்ல ஈஸ்வரியும் சரியென அனுப்பி வைக்கிறார். அதையடுத்து அலுவலகத்தில் காண்ட்ராக்ட் எடுக்க வந்தவங்களை உள்ளே அழைக்கின்றனர்.

சந்தோஷமாக பாக்கியா எழுந்திரிக்க அவருடன் இன்னும் சிலரும் எழுகின்றனர். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். வேறு ஸ்டால் எடுக்க வந்திருப்பாங்க என்ற நம்பிக்கையில் உள்ளே செல்கிறார். அங்கு சென்ற பின்னர் தான் அனைவருமே கேண்ட்டீன் காண்ட்ராக்ட்டுக்கு வந்தவர்கள் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: டேய் ஏன் ஓடுற?.. இதலாம் என்ஜாய் பண்ணு!.. சங்கடத்தில் நெளிந்த ரஜினிக்கு சிவாஜி சொன்ன அட்வைஸ்…

அவர்களோ பத்தாயிரம் கிடைக்காது. ஒரு லட்ச ரூபாய் வந்துவிடும் என்கின்றனர். உடனே வாங்கிக்கலாமா என கேட்க கொஞ்சம் ப்ராசஸ் இருக்கும் ஒரு மாதம் வரை ஆகும் என்கின்றனர். இதனால் பாக்கியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது. வீட்டுல என்ன சொல்ல போறேன். வேலைக்கு இருக்கும் பெண்களுக்கு என்ன சொல்ல போறேன்? வேலை கொடுத்திடலாமே என நினைத்தேனே என நினைத்து கவலைப்படுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

 

Related Articles

Next Story