இடி மொத்தமா இறங்கிட்டு போல..! பாக்கியா வாழ்க்கையில் எல்லாமே சதி பண்ணுதே..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் சூப்பர்மார்க்கெட்டில் இருந்து கோபியை இழுத்து வருகிறார் ராதிகா. இதையடுத்து அவர்கள் காரில் சென்று கொண்டு இருக்க, பாக்கியா மேல அவ்வளோ அக்கறையோ? அவங்க பின்னாடியே போறீங்க எனக் கோபமாக கேட்கிறார்.
இனிமே இப்படி பண்ணீங்க? நான் கிளம்பிடுறேன் எனக் கடுப்படிக்கிறார் ராதிகா. இதையடுத்து இனிமே எதுவுமே செய்யமாட்டேன் என சமாதானம் செய்கிறார் கோபி. இதையடுத்து வீட்டில் அமிர்தா, எழில், இனியாவுடன் அமர்ந்து பொருட்காட்சியில் என்ன சமைக்கலாம் என்பதை லிஸ்ட் போட்டு கொண்டு இருக்கிறார் பாக்கியா.
இதையும் படிங்க:சிவாஜிக்கு மட்டும் தரீங்க… எனக்கும் வேணும்.. எம்.ஜி.ஆரிடம் அடம் பிடித்து வாங்கிய நம்பியார்..!
அங்கு வரும் செழியன், காண்ட்ராக்ட் ஆர்டர் வேலையெல்லாம் நல்லா போகுதாமா. நீங்க பேசுறத வச்சி தான் உனக்கு ஆர்டர் கிடைச்சதையே நான் தெரிஞ்சிக்கிட்டேன். காசு எதுவும் தேவை இருக்காம்மா என்கிறார். இல்லப்பா நான் பார்த்துக்கிறேன் எனக் கூறிவிடுகிறார் பாக்கியா. இதையடுத்து செழியன் ரூமுக்கு சென்று விடுகிறார்.
பின்னர் பழனிசாமியை பார்த்து அவர் காண்ட்ராக்ட்டுக்காக கொடுத்த காசுக்கு அடுத்த நாள் தேதி போட்டு செக்கை கொடுக்கின்றனர். அதனை தொடர்ந்து வீட்டில் இருப்பவர்கள் தேவையான பொருளை பேக் செய்து பொருட்காட்சி நடக்கும் இடத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதையும் படிங்க: ரவிக்காக ஓவர் சப்போர்ட்டில் இறங்கிய மீனா..! வீட்டுக்கெல்லாம் வரமுடியாது.. விடாப்பிடியாக இருக்கும் ஸ்ருதி..!
அந்த நேரத்தில் மழையும் பிடித்து விடுகிறது. இதை பார்த்த ஈஸ்வரி இந்த மழைல யார் வருவா? நீ பேசாம பொருட்காட்சிக்கு கொடுத்த காச வாங்கிட்டு வந்துற என ஷாக் கொடுக்கிறார். இதை கேட்டு அமிர்தா, ராமமூர்த்தி அதிர்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.