ஏங்க கோபி சார்..! நீங்க ரொம்ப உத்தமன்தான்… ஈஸ்வரிக்கு என்ன பைத்தியம் பிடிச்சிட்டு போல?

by Akhilan |   ( Updated:2023-11-27 05:25:20  )
ஏங்க கோபி சார்..! நீங்க ரொம்ப உத்தமன்தான்… ஈஸ்வரிக்கு என்ன பைத்தியம் பிடிச்சிட்டு போல?
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி, பாக்கியாவையும் பழனிசாமியையும் தரக்குறைவாக விமர்சித்து கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் பேச்சு எல்லை மீறி போக பாக்கியா இதனுடன் வாயை அடக்கிக்கொள்ளுங்கள் என எச்சரிக்கிறார்.

என் வீட்டுல இதெல்லாம் நடக்குறத பாத்துக்கிட்டு இருக்க முடியாது என கோபி சொல்கிறார். உங்க வீடா வெளியே போய் பாருங்க. வெளியில பாக்கியலட்சுமி இல்லம்னு போர்ட் இருக்கும் என்கிறார். இங்க தான் அநியாயம் நடக்குதுனு தெரிதுல. அப்போ ஏன் இங்கையே இருக்கீங்க? வீட்டை விட்டு வெளியே போங்க என்கிறார்.

இதையும் படிங்க:அமீருக்கு ஓகே சொன்ன விஜய்… இருந்தும் டேக் ஆஃப் ஆகாததற்கு காரணம் என்ன தெரியுமா?…

இதை தொடர்ந்து செழியன் கோபத்தில் கீழே வர பார்க்க அவருக்கு தொடர்ந்து கால் வந்து விடுகிறது. பழனிசாமி தன்னால் சண்டை வேண்டாம் எனக் கூறி கிளம்பி விடுகிறார். கையும் களவுமா மாட்னதும் எஸ்கேப் ஆகிட்டாரு பாருங்க என கோபி நக்கலாகா பேசுகிறார்.

நான் வெளியில போகணுமா? போக மாட்டேன். என்னை மரியாதை இல்லாம பேசுனதுக்கு அம்மா வரட்டும். கவனிச்சிக்கிறேன் எனக் கூறி செல்கிறார். இதை தொடர்ந்து சமையலறையில் பாக்கியா இருக்க, எழில் அமிர்தா வந்து பொருட்காட்சி ரத்து செய்யவில்லை. தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்கின்றனர்.

இதை தொடர்ந்து கோபி நான் வீட்டுக்கு போறேன் என ஈஸ்வரியிடம் நடிக்கிறார். அவர் என்ன விஷயம் எனக் கேட்க பழனிசாமி முன் நின்று என்னை வெளியில் போக பாக்கியா சொன்னா எனப் போட்டு கொடுக்கிறார். இதை தொடர்ந்து ஈஸ்வரி பாக்கியாவை கூப்பிட்டு அப்படி பேசுனியா எனக் கேட்கிறார். ஆமா சொன்னேன். பழனிசாமி சாருக்காக பேசலை.

இதையும் படிங்க: வீட்டுக்கு போக ஆசைப்படும் ரவி.. முரண்டு பிடிக்கும் ஸ்ருதி.. அசிட் அடிக்க காத்திருக்கும் பிஜூ..!

Next Story