அடுத்த டைவர்ஸ் ரெடி..! பாக்கியா போல கிளம்பிய ஜெனி..! அடுத்து யாரு அமிர்தாவா..?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் மாலினி செழியன் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்கிறார். இதையடுத்து பாக்கியாவுக்கும் இந்த உறவு குறித்து தெரியும். எங்க பிரச்னையை வீட்டில் பேசுவதாக கூறினார் என அவரையும் போட்டுவிடுகிறார்.
இதையடுத்து ராமமூர்த்தி செழியன் மீது எவ்வளவு தப்பு இருக்கோ. அதே மாதிரி தப்பு தான் உன் மீதும் மாலினி இருக்கு. என்ன செய்வதாக இருந்தாலும் செஞ்சிக்கோ. வெளியில் போய் விடு என்கிறார். இதை தொடர்ந்து வெளியில் போ என எல்லாரும் திட்டுகின்றனர். மாலினி நான் சும்மா விட மாட்டேன் என்கிறார்.
இதையும் படிங்க: ஒத்த வார்த்தைல ரஜினியை கடுப்பாக்கிய லாரன்ஸ்.. அதிகமா பேசினா இப்படித்தான் நடக்கும்!..
என்ன வேணாலும் பண்ணு என அனுப்பி விடுகின்றனர். இதையடுத்து கோபி என்கிட்ட சொல்லிருக்க வேண்டி தானே என்கிறார். உங்ககிட்ட சொல்ல ட்ரை பண்ணேன். ஆனா சொல்ல முடியலை என்கிறார். ஈஸ்வரி என்கிட்டயாவது சொல்லிருக்கலாமே என்கிறார்.
அதையடுத்து எழில் இப்போ இவன் பண்ணது தப்பு இல்லை. எங்க அம்மா செஞ்சது தான் தப்பா என்கிறார். உங்ககிட்ட எப்படி அத்தை சொல்றது என்க, உட்கார்ந்து இருந்த ஜெனி அப்போ என்கிட்டையாது சொல்லி இருக்கலாமே எனக் கோபப்படுகிறார்.
என்கிட்ட ஏன் மறைச்சீங்க எனக் கோபப்படுகிறார். இதையடுத்து செழியன் பேச வர அவரை கடுப்பில் அறைந்து விடுகிறார். அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி பேச வர என் புருஷன் கிட்ட பேசிக்கிட்டு இருப்பதாக கூறுகிறார்.
நான் உன்னை எதையாவது தொல்லை செய்றேனா? நான் பாட்டுக்கும் தானே இருக்கேன். ஆனா நீ என்னென்னலாம் சொல்லி வச்சிருக்க. அப்போ நான் வலியில குழந்தை பெத்தப்பையும் நீ அவளை தானே பாத்திட்டு வந்திருக்க எனக் கத்துகிறார். இனிமே இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன் என்கிறார்.
இதையும் படிங்க: அந்த படத்தில இருந்து அடிச்சி பண்ணதா இது?!. தக் லைப் வீடியோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!…
இதையடுத்து செழியன் சரி நான் போய் விடுகிறேன் என்க நீ வரவே வேண்டாம் என்கின்றனர். இதையடுத்து பாக்கியாவும், எழிலும் நாங்க கூப்பிட்டு போய் விடுவதாக கூற யாரும் வேணாம். எதுவும் சொல்லிட போறேன் என்கிறார். இதையடுத்து ஜெனி தன் குழந்தையை தூக்கி கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். குடும்பமே அதிர்ச்சியாக நிற்பத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.