எப்பா செழியா மொத்தத்துல உண்மைய சொன்னீயே…! கோபி சார் மூஞ்சு எங்க வச்சிப்பீங்க..!

by Akhilan |
எப்பா செழியா மொத்தத்துல உண்மைய சொன்னீயே…! கோபி சார் மூஞ்சு எங்க வச்சிப்பீங்க..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் அழுதுக்கொண்டு இருக்கும் செழியனை பார்க்கிறார் எழில். நான் பண்ண தப்புக்கு ஜெனியிடம் மன்னிப்பு கேட்கணும்டா. குழந்தையை பார்க்கணும். போன் பண்ணி கேளு இல்ல என்கூட வீட்டுக்கு வா எனக் கவலையாக பேசுகிறார்.

இதை கேட்ட எழில் கடுப்பாகி செழியனை கண்டப்படி திட்டுகிறார். உன்னால அம்மாவை சொல்றாங்க எல்லாரும் நான் வரமாட்டேன் என கூறிவிடுகிறார். இதை தொடர்ந்து செழியனே ஜெனி வீட்டுக்கு வருகிறார். அவரை பார்த்த ஜெனி உடனே கதவை அடைத்து சாத்தி விடுகிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் படத்தை டிராப் செய்கிறாரா ரஜினிகாந்த்!.. எல்லாத்துக்கும் காரணம் அவர் தானா?..

ஆனால் செழியன் தொடர்ந்து கதவை தட்டிக்கொண்டே இருக்கிறார். பிறகு செழியன் ஜெனி வீட்டுக்கு வந்து கதவை தட்ட ஜெனி செழியனை பார்த்ததும் கதவை சாற்றி விடுகிறார். அதன் பிறகு செழியன் மீண்டும் மீண்டும் உன்கிட்ட பேசணும் ஜெனி எனக்கூறி கதவை தட்டுகிறார்.

அவருக்கு பதில் ஜெனி அம்மா வந்து கதவை திறந்து இவ்வளோ செஞ்சிட்டு எப்படி இங்க வந்தீங்க. அவ உங்ககிட்ட பேச மாட்டா. அவளே பேசணும்னு நினைச்சாலும் நான் பேச விட மாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். இதையடுத்து வீட்டில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியை வந்து அழைக்கிறார் பாக்கியா.

ஆனால் அவர்கள் சாப்பாடெல்லாம் வேண்டாம் எனக் கூறிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் ஜெனி அம்மா கால் செய்கிறார். இங்க வந்து செழியன் பிரச்னை செய்து கொண்டு இருப்பதாக கூறுகிறார். ஆனால் ஈஸ்வரி அசராமல் ஜெனியை பார்க்க விட வேண்டியது தானே என்று சொல்ல ஜெனி அம்மா புரிஞ்சு தான் பேசுறீங்களா எனக் கோபப்படுகிறார்.

இதையும் படிங்க: அண்ணா உட்ருண்ணா!.. லியோ ஃபிளாஷ்பேக்கே பொய்யாம்.. உருட்ட ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்!..

நானா இருக்கதால பேசிட்டு இருக்கேன். வேற யாராவது இருந்திருந்தால் போலீஸ் ஸ்டேஷன் போயிருப்பாங்க என திட்டிவிட்டு போனை வைக்கிறார். பிறகு கோபி கால் செய்தும் செழியன் எடுக்காததால் செழியனை அழைத்து வர போகிறார்.

அப்போ பாக்கியாவை திட்டுகிறார் ஈஸ்வரி. இதைக் கேட்ட ராதிகா நீங்க பண்றது ரொம்ப தப்பு என சண்டைக்கு வர ஈஸ்வரி அமைதியா இருந்தா இந்த வீட்டில் இரு என்கிறார். ராமமூர்த்தியோ நீ ரூமுக்கு போமா என்கிறார். எழில் உங்க பையன் தப்பு செஞ்சாலும் எங்க அம்மா தான். இப்போ இவன் செஞ்சதுக்கும் எங்க அம்மாதானா என்கிறார்.

கோபி செழியனை அழைத்து கொண்டு காரில் வருகிறார். அப்போ அழுதுக்கொண்டே பேசும் செழியன் அம்மா ஜெனி கிட்ட போய் உண்மையை சொல்லி மன்னிப்பு கேளுனு நிறைய முறை சொன்னாங்க. இப்போ என்னால தான் அவங்களுக்கும் பிரச்சனை என உண்மையை கூறுகிறார். இதனால் கோபி ஷாக் ஆகுகிறார்.

பாக்கியா ஜெனிக்கு போன் செய்து எடுக்காமல் போக அவர் அம்மாவுக்கு கால் செய்கிறார். உங்களுக்கு வந்த அதே நிலைமை தான் என் பொண்ணுக்கும் இப்போ வந்திருக்கு என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story