பாக்கியலட்சுமி: இன்னைக்கு இரண்டு ஜோடி வாழ்க்கை க்ளோஸ்ஸா? இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல..!

by Akhilan |
பாக்கியலட்சுமி: இன்னைக்கு இரண்டு ஜோடி வாழ்க்கை க்ளோஸ்ஸா? இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கல..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டில் கணேசன் அப்பா, அம்மா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அமிர்தாவின் அம்மா வருகிறார். வந்தவர் கோபமாகவே என் பொண்ண தயவு செஞ்சு விட்டுடுங்க. அவ இப்போ தான் சந்தோஷமா வாழவே தொடங்கிருக்கா என்கிறார்.

அப்பொழுது அங்கு வரும் கணேஷ் அத்தை என கூப்பிட முறைத்துக் கொண்டிருக்கிறார் அமிர்தாவின் அம்மா. நான் உயிரோட வந்ததுல கொஞ்சமும் உங்களுக்கு சந்தோஷம் இல்லையே. அதற்கு அமிர்தா அம்மா நீங்க கொஞ்ச நாளைக்கு முன் வந்து இருந்தா என் முடியை காணிக்கையை தந்து இருப்பேன்.

இதையும் படிங்க: அவர்தாங்க தொழில் சொல்லிக்கொடுத்த குருவே.. சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் வசமா சிக்கிட்டாரே!..

ஆனா இப்போ அமிர்தா வாழ ஆரம்பிச்சிருக்கா. இந்த நேரத்தில் இப்படி வந்தா என்ன சொல்ல முடியும்.தயவு செஞ்சு என் பொண்ணை வாழ விட்டுடுங்க என பேச கணேசன் அப்பா அம்மா இருவரும் அமிர்தாவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார்கள்.

அப்பொழுது பாக்யாவிடம் கணேஷ் வந்ததை சொல்லிவிட்டோம் என்கின்றனர். இதனால் கவலையான அமிர்தாவின் அம்மா நிலா இப்பதான் எழிலை அப்பானு கூப்பிட ஆரம்பிச்சிருக்கா இந்த நேரத்துல இவரை அப்பானு கூப்பிட சொல்றதா அந்த பிஞ்சு மனசு கஷ்டப்படும் என்கின்றனர்.

நான் தான் அப்பா. கண்டவனை எதுக்கு அப்பானு கூப்பிடணும். என்னை தான் கூப்பிடணும் என கணேஷ் பேசுகிறார். அவர் அம்மாவோ கணேசிடம் தயவு செய்து என் பொண்ணை நிம்மதியா வாழ விடு என்கிறார். இதனை கேட்ட கணேஷ் மேலும் அதிர்ச்சி ஆகிவிடுகிறார்.

பின்னர் அமிர்தாவின் அம்மா பாக்கியா வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஜெனியை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு அமிர்தாவிடம் பேசுகிறார். பின்னர் பாக்கியா வர அவர் அமிர்தாவை காபி எடுத்து வர அனுப்புகிறார். கணேஷ் வந்ததை நினைத்து வருத்தமாக பாக்கியாவிடம் பேசுகிறார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த விஜயா… மீனா எடுத்த முடிவு..!

எழில் வாழ்க்கை என்ன ஆகும் எனக்கே தெரியலை. இவ்வளவு கஷ்டப்பட்டு சண்டை போட்டு பிடிவாதம் பிடித்து அமிர்தாவை கல்யாணம் பண்ணா இப்படி ஆகிட்டே என பாக்யா வருத்தப்படுகிறார். அப்பொழுது அமிர்தாவின் அம்மா எந்த பிரச்னை வந்தாலும் என் பொண்ணுக்கூட தான் நீங்க நிக்கணும் எனக் கேட்கிறார்.

மற்றொரு பக்கம் கோபி ராதிகாவை சந்திக்க அவர் வீட்டுக்கு வருகிறார். அவரை பார்த்த ராதிகா இங்க ஏன் வந்தீங்க என சத்தம் போடுகிறார். அந்த சமயத்தில் ஈஸ்வரி அங்கு வந்துவிட கண் அசந்த நேரம் பார்த்து இங்க வந்துட்டியா.

ஏன் கோபி உனக்கு என்ன சொல்லியும் புரியலை என்கிறார். இனி இங்க நீ வரக்கூடாது என கறாராக சொல்லி விடுகிறார். அதற்கு ராதிகாவின் அம்மா வார்த்தையை அளந்து பேசுங்க நாங்க ஒன்னும் அவரை கூப்பிடலை என்கிறார். அந்த நேரத்தில் மயூ வந்து டேடி எனக் கூப்பிடுகிறார்.’

இதனால் கடுப்பாகும் ஈஸ்வரி யாருக்கு யார் டேடி, குத்துகல்லு மாதிரி மூணு புள்ள அங்க இருக்கு. யாருகிட்ட நீ பேசுற எனக் ஈஸ்வரி கூறுகிறார். இதனால் ராதிகா கோபப்பட்டு ஒழுங்கா உங்க பிள்ளையை கூட்டிட்டு போய்டுங்க. தேவை இல்லாம ஏன் பொண்ண பத்தி எதுவும் பேசக்கூடாது என திட்டுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

Next Story