ஒரே நேரத்தில் மகன்களின் வாழ்க்கைக்கு போராடும் பாக்கியா… சைடில் ஜல்சா பண்ணும் அப்பா கோபி..!

by Akhilan |
ஒரே நேரத்தில் மகன்களின் வாழ்க்கைக்கு போராடும் பாக்கியா… சைடில் ஜல்சா பண்ணும் அப்பா கோபி..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜெனி ரூம்க்கு வரும் பாக்கியா, குழந்தையை துடைத்து விட டவலை கேட்கிறார். செழியன் எடுத்து கொடுக்க பாக்கியா கோபமாக ஜெனியை கேட்டதாக கூறுகிறார். இதை பார்த்த ஜெனி ஏன் செழியன் எதுவும் தப்பு செஞ்சிட்டானா எனக் கேட்கிறார்.

எப்ப பாரு ஆபிஸ்னே இருக்கான் எனக் கடுப்பாக சொல்கிறார். செழியனை விட்டு கொடுக்காமல் பேசுகிறார் ஜெனி. செழியனை வெளியில் கூப்பிட்டு வரும் பாக்கியா அவளுக்கு எப்படி துரோகம் பண்ணமுடிஞ்சிது. போன் தானே பிரச்சனை என்று அதை பிடிங்கி கொண்டு செல்கிறார்.

இதையும் படிங்க: பாபா படம் ஃபிளாப்!.. ரஜினி கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன லிங்குசாமி!..

இதையடுத்து, ஹாலில் படுத்து தூங்கி கொண்டு இருக்கிறார் ஈஸ்வரி. கொசுக்கடியில் எழுந்து உட்கார்ந்து இருக்க பாக்கியா நான் வேணா தைலம் தேய்க்கவா எனக் கேட்க இல்லை நான் தேய்ச்சிக்கிறேன். நீ போய் தூங்கு என அனுப்பி விடுகிறார்.

இதையடுத்து கோபியை ரூம் கதவை தட்டுகிறார். ராமமூர்த்தி சிக்கினான் எனக் கலாய்த்து விட்டு தூங்குகிறார். ரூமில் ஒன்றாக தூங்கிக் கொண்டிருந்த ராதிகாவை தரையில் படுக்க சொல்லி விடுகிறார். பெட்டில் அம்மாவும், மகனும் படுத்து கொள்கின்றனர்.

காலையில் வாக்கிங் சென்ற கோபியிடம் மகன்கள் விஷயம் பேச போகிறார் பாக்கியா. அந்த நேரத்தில் ராதிகா அங்கு வந்து நிற்க அவ இருக்கட்டும் நீ சொல்லு என்கிறார். இதையடுத்து பசங்க விஷயத்தினை நீ என்ன பேசணும் என்கிறார்.

இதையும் படிங்க: பாலச்சந்தர் ‘ரஜினி’ என பெயர் வைக்க காரணம் இதுதானாம்!.. இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..

ஆனால் பாக்கியா நான் வீட்டுல பேசணும் என்கிறார். கணேஷின் அம்மாவும் இந்த விஷயத்தில அமிர்தாவும், கணேஷும் பேசி முடிவு எடுக்கட்டும் என்கிறார். ஒரு மாசம் டைம் கொடுங்க. நான் முடிவு எடுக்கிறேன். அதுவரைக்கும் எங்க வீட்டுக்கு கணேஷ் வரக்கூடாது எனக் கறாராக சொல்லிவிட்டு செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story