அல்ட்ரா லெவலில் நாடகம் போட்டீங்களே கோபி…! ராதிகா கிட்ட காசு இல்லனு கூட சொல்லிருக்கலாமே..!

by Akhilan |
அல்ட்ரா லெவலில் நாடகம் போட்டீங்களே கோபி…! ராதிகா கிட்ட காசு இல்லனு கூட சொல்லிருக்கலாமே..!
X

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி, ராதிகா மற்றும் ம்யூ ஆகிய மூவரும் நகைக்கடைக்கு வருகின்றனர். ஒவ்வொரு நகையாக ராதிகா பார்த்து கொண்டு இருக்க சிம்பிளா பாக்கலாமே என கோபி சமாளித்துக் கொண்டு இருக்கிறார்.

சிம்பிளான டைமண்ட்ல தான் பார்க்கணும் என ராதிகா சொன்னவுடன் சத்தமில்லாமல் அமைதியாகி விடுகிறார். கடைசியில் இருவரும் இரண்டு நெக்லஸ் செலக்ட் செய்து கோபியை ஒன்று செலக்ட் செய்ய சொல்கின்றனர். அவரும் ம்யூ செலக்ட் செய்ததை ஓகே செய்து விடுகிறார்.

இதையும் படிங்க: லியோ எல்சியூ தான்!.. ஆக்‌ஷனில் மட்டுமில்லை ஆக்டிங்கிலும் அசுரத்தனத்தை காட்டிய விஜய்.. ட்விட்டர் விமர்சனம்!

பில் மூன்று லட்சத்து 30 ஆயிரம் வந்து விடுகிறது. ராதிகா அதிகம் வந்த 30 ஆயிரம் நான் தந்து விடுகிறேன் எனக் கூறுகிறார். உடனே கார்டை எடுக்க சொல்ல கோபி நெஞ்சை பிடித்துகொண்டு உட்கார்ந்து கீழே விழுந்து விடுகிறார். உடனே அவரை அவசரமாக அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார் ராதிகா. இந்த நேரத்தில் ஈஸ்வரி தனக்கு எதுவோ போல படபடப்பா இருக்கு.

நான் கோபிக்கு கால் செய்து கேட்கிறேன் என ராமமூர்த்தியிடம் சொல்கிறார். அவர் சொல்ல சொல்ல கால் செய்து கோபிக்கு நெஞ்சு வலி வந்த விஷயத்தினை தெரிந்து கொண்டு பதறிவிடுகிறார். இதையடுத்து கோபிக்கு வந்து இருப்பது பேனிக் அட்டாக் தான் என்றும் எதுவும் கவலை இருந்தால் வரும் என டாக்டர் சொல்லி விடுகிறார்.

இதையும் படிங்க: யானைக்கும் ஒரு நாள் அடி சறுக்கும்! அத மட்டும் எதிர்பார்க்காதீங்க - ‘லியோ’ பத்தி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து மூவரும் கிளம்பி வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் ஈஸ்வரி வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு விஷயத்தினை சொல்லி அழுகிறார். அதை தொடர்ந்து செழியன் கால் செய்து பார்க்கிறார். போனை எடுத்த ராதிகா எந்த பிரச்னையும் இல்லை.

வீட்டுக்கு தான் சென்று கொண்டு இருக்கோம் எனக் கூறி விடுகிறார். இதையடுத்து ஈஸ்வரியும், இனியாவும் கோபியை உடனே பார்க்கணும் எனக் கூறி கிளம்புகின்றனர். செழியனை கூட சென்று வரக் கூறுகிறார் ராமமூர்த்தி. அவர்கள் கிளம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story