மீண்டும் மீண்டுமா..! பாக்கியா வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த ராதிகா..! மாலினிக்கு ஷாக் கொடுத்த செழியன்..!
Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவை திட்டி போனை வைத்தில் கடுப்பாகி விடுகிறார். ராதிகாவின் அம்மா நீ இப்படி இருந்தால் இனி அடுத்து விவகாரத்து தான் நடக்கும் என பதற வைக்கிறார். இதனால் ஒரு முடிவுடன் கிளம்புகிறார் ராதிகா.
அடுத்து மாலினியை பார்க்க வருகிறார் செழியன். என்ன இப்படி படுத்துற என திட்டி தீர்க்க எனக்கு நீ வேணும் செழியா என வாய் பேசுகிறார். அதான் முடிஞ்சிட்டுனு சொன்னேன்ல எனக் கூற மாலினி எனக்கு ஒன்னு வேணும்னா எந்த லெவலுக்கு வேணாலும் போவேன் என மிரட்டுகிறார்.
இதையும் படிங்க: இனிமே இப்படிதான் நடிக்கனும்… விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட சங்கீதா…
என்ன வேணுனாலும் பண்ணு, யாருக்கு வேணா போட்டோ அனுப்பு. நீ என்ன சொல்றது. நானே சொல்றேன். என் ஜெனி இந்த தப்புக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன் எனக் கூறி செல்கிறார்.
வீட்டில் ஈஸ்வரி கோபிக்கு என்ன வேணும் என கேட்டுக்கொண்டு இருக்க திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது. அதையடுத்து பேக்குடன் ராதிகா மீண்டும் எண்ட்ரி கொடுக்கிறார். ஈஸ்வரி போனே பண்ணாதனு சொன்னா நீ ஏன் இங்க வந்த எனத் திட்டுகிறார்.
என் புருஷன் இருக்கிற இடத்தில தானே நான் இருக்க முடியும் என்று வாதிடுகிறார். அதெல்லாம் முடியாது என ஈஸ்வரி கூற அப்ப கோபியை என் கூட அனுப்புங்க என்கிறார். அதுக்கு ஈஸ்வரி முடியாது எனக் கூற அப்போ நான் இங்க தான் இருப்பேன் என்கிறார்.
அப்படின்னா என்னாலயும் போக முடியாது எனக் கூறும் ராதிகா. உங்களுக்கு ரெண்டு வழி தான். ஒன்னு கோபி அனுப்பனும் இல்லனா நான் இங்க இருப்பேன் என்று ராதிகா சொல்லி விடுகிறார். ஈஸ்வரி கோபி உடம்பு சரியாகும் வரை இங்கதான் இருப்பான் என்கிறார்.
இதையும் படிங்க: பேபி டால் பார்பி டாலா மாறிடுச்சே! ப்யூட்டி ஏறுதோ இல்லையோ அது ஏறுது – அனிகா ரீசண்ட் க்ளிக்ஸ்
ராதிகா அப்படின்னா நானும் இங்கதான் இருப்பேன் என்று சொல்ல கோபி பேபி ரூம் கீழே என்று சொல்கிறார். இவளா பேபி என ஈஸ்வரி கடுப்படிக்கிறார். பிறகு பாக்கியா நான் வீட்டை விட்டு கிளம்புறேன் எனக் கூறுகிறார். ஈஸ்வரி நான் ஏற்கனவே கஷ்டத்துல இருக்கேன். நீயாவது என்னை புரிஞ்சிக்கோயேன்.
இல்ல என்ன மீறி வெளியே போனா என்ன நீ புரிஞ்சிக்கலனு தான் அர்த்தம் என்கிறார். எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பையன். அவனை இழந்ததுடுவேனோனு எனக்கு பயமா இருக்கு. இப்ப ராதிகாவை போக சொன்ன கோபியும் கூடவே போய்டுவா, அவன் வீட்டை விட்டு போயிட்டா நான் உடைந்து போய்விடுவேன் என்று சொல்லி போக இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.