இயக்குனர் பாலாவுக்கும் லைலாவுக்கும் அந்த மாதிரி ஒரு தொடர்பு இருந்ததா?… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!…
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் என்பதை பலரும் அறிவார்கள். எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை படம்பிடித்து காட்டும் இவரது திரைப்படங்கள், தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்ப்பவைகள் ஆகும்.
எனினும் சமீப காலமாக இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படங்களுக்கு பல பிரச்சனைகள் எழுகின்றன. அவர் இயக்கிய “வர்மா” திரைப்படம் கூட திரையரங்குகளில் வெளியாகவில்லை. மேலும் சூர்யா வைத்து அவர் இயக்கிய “வணங்கான்” திரைப்படமும் பாதியிலேயே நின்றது. தற்போது அத்திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் மீசை ராஜேந்திரன் பாலாவை குறித்து ஒரு காலகட்டத்தில் பரவிவந்த ஒரு கிசுகிசு குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் குறித்தான கிசுகிசுக்கள் என்பது மிகவும் சாதாரண விஷயம்தான். ஆனால் இயக்குனர் பாலாவை குறித்து ஒரு காலகட்டத்தில் இப்படி ஒரு கிசுகிசு பரவியதை கேள்விபடும்போது வியப்பாகவே இருக்கிறது.
பாலா இயக்கிய “நந்தா”, “பிதாமகன்” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லைலா. இந்த நிலையில் லைலாவை இயக்குனர் பாலா திருமணம் செய்துகொள்ள இருந்ததாக அக்காலகட்டத்தில் பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனையால்தான் லைலா, “பிதாமகன்” திரைப்படத்திற்கு பிறகு பாலா இயக்கிய எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை எனவும் கிசுகிசுக்கப்பட்டதாம். இவ்வாறு லைலாவுடன் இயக்குனர் பாலா கிசுகிசுக்கப்பட்டதை குறித்த தகவலை அப்பேட்டியில் மீசை ராஜேந்திரன் பகிர்ந்துகொண்டுள்ளார்.