ஆறுதல் கூறிய நபர்கள்... அசிங்கமாக திட்டிய பாலா.... ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்....!
கோலிவுட்டில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் பாலா. இதுவரை பல வெற்றி படங்களை வழங்கிய பாலா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் எந்தவித புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருத்து வந்தார். இந்நிலையில் தான் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இதற்கிடையில் இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலரை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இவர்கள் விவாகரத்து குறித்து பல செய்திகள் மற்றும் வதந்திகள் சோசியல் மீடியாவில் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி விவாகரத்திற்கு பிறகு தனது மனைவி முத்துமலரை நினைத்து புலம்பிய இயக்குனர் பாலா தற்போது அந்த விஷயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துவிட்டார். தற்போது நடிகர் சூர்யாவை வைத்து படம் எடுக்க கன்னியாகுமரி சென்றுள்ளார்.
அங்கு நேற்று பூஜையுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சிலர் விவாகரத்து குறித்து இயக்குனர் பாலாவுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அப்போது, பாலா, "அந்த சனியன் தொலைஞ்சது. இனி அதை பத்தி எதுவும் பேச வேண்டாம். இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை கண்ட ரசிகர்கள் என்னதான் விவாகரத்து ஆனாலும் கட்டுன மனைவியை இப்படித்தான் பலர் முன்னிலையில் திட்டுவதா என பலரும் பாலாவிற்கு எதிராக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.