Connect with us

Cinema News

அருண் விஜய்யை அடி வெளுத்த பாலா!.. வணங்கான் வந்தா பெரிய சர்ச்சை வெடிக்கும்.. பிரபலம் சொன்ன தகவல்!..

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வணங்கான் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. முதலில் இந்த படத்தில் சூர்யா தான் நடிக்க கமிட் ஆனார். ஆனால், படத்தை தயாரித்து நடிக்கும் அவருக்கே பாலா கதையை சொல்லாமல் பீச்சில் தேவையில்லாமல் ஓட விட்டது சூர்யாவை கஷ்டப்படுத்தி கடைசியில் என்ன கதை தான் பண்றீங்க பாலான்னு கேட்க இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

பாலா படத்தில் நடிக்க வேண்டும் என ரொம்ப வருடமாக ஆசைப்பட்டு வந்த அருண் விஜய்யை நினைவில் கொண்டு சூர்யாவுக்கு பதிலாக அவரை நடிக்க அழைத்திருக்கிறார் பாலா.

இதையும் படிங்க: கட்டி வச்சி அடிச்ச எம்ஜிஆர்! ஷாக்கான ஜெயலலிதா!. சந்திரபாபுவுக்கு எதிரே நடந்த சம்பவம்!..

சூர்யா தயாரிப்பதையும் நடிப்பதையும் நிறுத்திய நிலையில், சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். அருண் விஜய் எவ்ளோ அடி வேணும்னாலும் தாங்கலாம். நல்ல நடிகனாக ஒரு நல்ல படைப்பில் நடித்தோம் என்கிற திருப்திக் கிடைத்தால் போதும் என்கிற மனநிலையுடன் தான் பாலா படத்திக் கடைசி வரை கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறார் என்றும் அருண் விஜய்க்கும் சூட்டிங் ஸ்பாட்டில் சில அடிகள் விழத்தான் செய்தன என்றும் செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

கடைசி ஷாட்டில் பிள்ளையார் மற்றும் பெரியார் சிலைகளை தூக்கிக் கொண்டு அருண் விஜய் சேற்றில் இருந்து வரும் காட்சியை பாலா வைத்துள்ள நிலையில், படம் வெளியானதும் அது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கண்டிப்பாக உருவாக்கும் என செய்யாறு பாலு பேசியுள்ளார்.

இதையும் படிங்க: அமீருக்கு அல்வா!.. பாலிவுட்டில் பெரிய ஆபிஸ்!.. சூர்யா, சிவகுமார் எங்க இருக்காங்க பாருங்க!..

டீசரை பார்க்கும் போது என்ன தான் பாலா வித்தியாசமாக படம் எடுத்தாலும், அருண் விஜய் கதாபாத்திரம் அப்படியே பிதாமகன் படத்தைத் தான் ஞாபகப்படுத்துகிறது என பளிச்சென சொல்லி உள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top