எல்லா கோட்டையும் அழி… புரோட்டா சூரி போல் முடிவெடுத்த பாலா… உச்சக்கட்ட காண்டில் சூர்யா…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாலா, தனது முதல் படமான “சேது” திரைப்படத்திலேயே ட்ரெண்ட் செட்டராக உருவானார். அதன் பின் “நந்தா”, “பிதாமகன்”, “நான் கடவுள்”, “அவன் இவன்”, “பரதேசி” என தனித்துவமான கதையம்சத்துடன் உடைய திரைப்படங்களை இயக்கி தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.
இவரது திரைப்படங்களில் சமூகத்தில் கடைநிலையில் உள்ள எளிய மனிதர்களை அடிப்படையாக வைத்தே கதை பிண்ணப்படும். பிணம் எரிக்கும் கதாப்பாத்திரம், கரகாட்ட கலைஞர்கள் என சமூகத்தில் யாரும் கவனிக்கப்படாத நபர்களாக இருப்பார்கள். இவ்வாறு ஒரு தனித்துவமிக்க இயக்குனராக வலம் வரும் பாலா, தற்போது சூர்யாவை வைத்து “வணங்கான்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாகவும், ஆதலால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் சூர்யா தரப்பு இதனை மறுத்தது. மேலும் இது போன்ற செய்திகள் பரவி வந்தபோது சூர்யா, இயக்குனர் பாலாவுடன் படப்பிடிப்பில் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் வெளிவந்தது.
எனினும் “வணங்கான்” திரைப்படம் எடுத்து முடித்த வரை படக்குழுவினர் பார்த்ததாகவும், ஆனால் எந்த காட்சியும் சரியாக வரவில்லை எனவும் சில தகவல்கள் வந்தன. இதனால்தான் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே பிரச்சனை வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாலா ஒரு அதிர்ச்சிகரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது திரைப்படத்தின் மொத்த கதையையும் மாற்றப்போகிறாராம். மறுபடியும் முதலில் இருந்து இத்திரைப்படத்தை தொடங்கப்போகிறாராம். இது போன்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவருகிறது. இதற்கு சூர்யா சம்மதித்தாரா என்பது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.
சூர்யா, விக்ரம் ஆகிய இருவரின் வாழ்க்கையிலும் முக்கிய நபராக திகழ்ந்தவர் பாலா. “சேது” திரைப்படம் விக்ரமிற்கும், “நந்தா” திரைப்படம் சூர்யாவிற்கும் அவர்கள் கேரியரிலேயே திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது “வணங்கான்” திரைப்படத்தின் கதையையே மாற்றியுள்ளதாக வெளிவரும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.