யாருகிட்ட...? இயக்குனர் பாலாவை கலாய்த்து பல்பு வாங்கிய மூத்த பத்திரிக்கையாளர்...
தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக வலம் வருபவர் பாலா. தன் திரைப்படத்தில் புதுமையான கதைகளம், மிரட்டும் தோணியில் கதாபாத்திரங்களை உருவாக்கி படத்தை பிரம்மாண்ட படுத்துவதில் வல்லவர். பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
முதன் முதலில் சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாலா. அடிமட்டத்தில் தவித்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரமை இந்த படத்தில் நடிக்க வைத்ததன் மூலம் விக்ரமிற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது சேது படம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா படத்தை இயக்கினார்.
இந்த படமும் அமோக வெற்றி பெற்றது. அதன் பின் சினிமா வட்டாரத்தில் பாலா என்றாலே தனி மரியாதை ஏற்பட்டது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை எடுக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கினின் ‘பிசாசு’ படம் வெளியானது. இந்த படத்திற்கு முதல் தயாரிப்பாளர் இயக்குனர் பாலாதான்.
ஒரு சமயம் பிசாசு படத்தின் விழாவில் கருப்பு உடையில் வந்திருந்தார். அப்போது முன் இருக்கையில் அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரெங்கநாதன் பிசாசு என்றாலே கருப்பு அதனால் தான் நீங்களும் கருப்பு உடையில் வந்துள்ளீர்களா? என கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பிசாசு ஏன் கருப்பு உடையில் தான் வரனுமா? பிங்க் நிற உடையில் கூட வரலாம் எனக் கூறினார். இதில் என்ன விஷயம் என்றால் பயில்வானும் பிங்க் நிற உடையில் தான் வந்திருந்தார். பாலாவின் இந்த பதிலை கேட்ட பயில்வானின் முகம் கொஞ்ச நேரத்தில் சட்டென மாறி படபடத்து விட்டது.