வாய்ப்பு கேட்ட நடிகரை மாவு அரைக்க வைத்த பாலா.....ஆனாலும் இது ஓவர்ப்பா!....
தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களில் எதிலும் புதுமையை விரும்புபவர் இயக்குனர் பாலா. வித்தியாசமான கதைகளம், கதாபாத்திரங்களை கதைகளோடு ஒட்ட செய்யும் அளவிற்கு வித்தியாசமான தோற்றங்களில் காட்டுபவர். ஒரு வெறியன் என்றே கூறலாம்.
இவரின் படங்களை கருத்தில் கொள்ளும் போது படத்திற்கு படம் வித்தியாசமாகவும், புதுமையாகவும் கதைகளத்தை உருவாக்கியிருப்பார். முதலில் விக்ரம் நடிப்பில் உருவான ‘ சேது’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனாராக பணிபுரிந்தார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவான நந்தா படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். தொடர்ச்சியான பல வெற்றிப் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். பரதேசி, பிதாமகன், அவன் இவன், தாரதப்பட்டை போன்ற தரமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த இயக்குனர்களில் ஒருவரானார்.
இந்த நிலையில் விஜய்டிவி புகழ் பாடகர் அனந்த் வைத்தியநாதன் அவன் இவன் படத்திற்காக கமிட் ஆகியிருந்ததாகவும் படப்பிடிப்பின் போது பாலாவை மிகவும் தொந்தரவு செய்ததாகவும் என்னுடைய வசனம் என்ன ? என அடிக்கடி கேட்டதாகவும் அதில் கடுப்பாகி போன பாலா ஒரு பெரிய மாவுக் கல்லை எடுத்து வர சொல்லி இவரை மாவாட்ட வைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த படத்தில் அனந்தின் கதாபாத்திரம் இதுதான் என சொல்லி அதிகளவு அரிசியை கொடுத்து மாவறைக்க வைத்துள்ளார் பாலா. ஒரு வாரம் முழுவதும் இதே வேலையை தான் அனந்தும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வலைப்பேச்சு புகழ் அனந்தன் இந்த தகவலை நமக்காக பகிர்ந்தார்.