யாரும் தொட விரும்பாத கதைக்களம்... வன்முறை தான் தீர்வு.. பாலா படங்களின் டாப் லாஜிக்குகள்...

by Akhilan |   ( Updated:2022-11-21 13:11:00  )
யாரும் தொட விரும்பாத கதைக்களம்... வன்முறை தான் தீர்வு.. பாலா படங்களின் டாப் லாஜிக்குகள்...
X

பாலா

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களின் எந்த படத்தினையும் குடும்பமாக உட்கார்ந்து பார்க்கவே முடியாது. கிளாமருக்கு இல்லை. படத்தின் வன்முறையா? படமே வன்முறையா? என்ற சந்தேகம் இருக்கும் அளவுக்கு சில கதைகளை இயக்கி இருப்பார்கள். அந்த வகையில் இயக்குனர் பாலா படங்களில் தொடர்ச்சியாக கையாளப்பட்டு வரும் சில லாஜிக்குகள் உங்களுக்காக...

சேது, நான் கடவுள், பரதேசினு தமிழ் சினிமா இயக்குனர்கள் எடுக்க தயங்கும் கதைகளை எடுத்ததில் பாலாவிற்கு நிகர் அவரே தான். அந்த படங்களை கண்டிப்பாக இளகிய மனம் கொண்ட எந்த ரசிகராலும் பார்க்க முடியாது என்றாலும் உண்மை நிலவரத்தையே கதையாக்கி இருப்பார்.

பிதாமகன்

அதிலும் பாலா படத்தில் நிஜமாகவே நடிகைகள், நடிகர்களுக்கு அடியே விழும். அப்போ படத்தில சும்மாவா இருப்பாரு. இருக்கும் எல்லா சண்டை காட்சிகளும் தத்ரூபமாகவே இருக்கும். எங்குமே ஹீரோ சமரசமாக போகவே மாட்டார்.

பாலா படத்தில் கண்டிப்பாக ஒரு கதாபாத்திரம் நிகழ்காலத்திற்கு சற்று பொருத்தமில்லாமல் இருக்கும். அதிலும், பிதாமகனில் வந்த விக்ரமும், அவன் இவன் படத்தில் வந்த விஷாலும் பெரிய ரீச்சை பெற்றவர்கள்.

பாலா

அவன் இவன்

அதை தொடர்ந்து, சிலர் சொல்ல தவறிய மக்களின் வாழ்க்கையையே பாலா படமாக எடுத்திருப்பார். நான் கடவுள் படத்துல அகோரிகளின் வாழ்க்கையையும், பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கையை சொன்னதும் பலருக்கு ரத்த கண்ணீரையே கொடுத்தது எனலாம். இப்படி பாலாவோட எல்லா படங்களுமே வித்தியாசமான கதைக்களமாக தான் இருக்கும். அக்மார்க்காக இந்த சில லாஜிக்குகள் கண்டிப்பாக பாலா படங்களில் மிஸ்ஸே ஆகாது எனலாம்.

Next Story