நன்றி சொன்னா கெட்ட கெட்ட வார்தைலேயே திட்டுவான்.! வருத்தப்பட்ட பிரபல நடிகர்.!

by Manikandan |
நன்றி சொன்னா கெட்ட கெட்ட வார்தைலேயே திட்டுவான்.! வருத்தப்பட்ட பிரபல நடிகர்.!
X

சமீபத்தில் வெளியாகும் திரைப்படங்களில் தியேட்டரில் வெளியாகும் திரைப்படங்களை விட OTT தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. மேலும், அதில் திரையில் காட்ட முடியாத பல்வேறு கதை களங்கள் அதில் வெளியாவதால் ரசிகர்கள் அதனை பெரிதும் விரும்பி பார்க்கின்றனர்.

அண்மையில் ஜீதமிழ் OTT தளத்தில் விமல், பாலசரவணன், இனியா ஆகியோர் நடித்து வெளியான வெப்சீரிஸ் விலங்கு. இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மக்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளை பெற்று வருகிறது.

இது திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதில் நடிகர் பாலசரவணன் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். தனது உடல் எடையை குறைத்து அப்படியே ஒரு கான்ஸ்டபிள் போலீஸ் எப்படி இருப்பாரோ, எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே இருந்தார். அவரது நடிப்பு பலரது பாராட்டுக்களை பெற்றது.

இதையும் படியுங்களேன் - குடுத்த காசுக்கு மேல கூவுறீங்களே சார்.! உங்கள நாங்க இப்படி எதிர்பார்க்கலயே.!

இதற்கு நடிகர் பாலசரவணன் தனது நண்பரும் விலங்கு வெப் சீரிஸ் இயக்குனருமான பிரஷாந்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஓர் ட்விட் செய்துள்ளார். அதில் நான் நன்றி என்று சொன்னால் என்னை கருப்பு போல திட்டுவாய் இருந்தாலும் பரவாயில்லை நன்றி என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்.

பாலசரவணன் அந்த விலங்கு வெப்சீரிஸில் ஏற்று நடித்த கதாபாத்திரம் கருப்பு. அந்த கதாபாத்திரம் அதிகமாக கெட்ட வார்த்தைகளை பேசும் வகையில் இயல்பாக நடித்திருப்பார் அதனை குறிப்பிட்டு பாலசரவணன் டிவீட் செய்து இருந்தார்.

Next Story