சூர்யா ஃபேன்ஸ் ரெடியா இருங்க!.. பாலா படத்தின் புதிய அப்டேட்...

by சிவா |
bala
X

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா தான். ஏனென்றால் பாலா படங்கள் தான் சூர்யாவுக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது. அந்த வகையில் நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பாலா சூர்யாவின் நடிப்பை திறமையாக வெளிக்காட்டி இருப்பார்.

அதன் பின் தனக்கென ஒரு ரூட்டை பிடித்து ஹிட் படங்களை கொடுத்தார். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது.

அதோடு, மீண்டும் பாலாவுடன் ஒரு புதிய படத்தில் அவர் இணையவுள்ளார். இப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளாராம் சூர்யா. மகன் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது அதர்வாதான். ஆனால், இப்படத்திலிருந்து அவர் விலகி விட இரட்டை வேடத்தில் சூர்யாவே நடிக்கவுள்ளாராம். முதலில் அதர்வாவுக்காகத்தான் இப்படத்தின் கதையை உருவாக்கினார் பாலா. ஆனால், சூர்யா உள்ளே வரவும் அவரை கழட்டிவிட்டார் எனக்கூறப்படுகிறது.

இப்படத்திற்கு மொத்தம் சூர்யா 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சூர்யா. வருகிற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

பல வருடங்கள் கழித்து பாலாவுடன் சூர்யா மீண்டும் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story