Cinema History
இளையராஜாவை அவமானப்படுத்திய பாலச்சந்தர்!.. இருவரும் பிரிந்ததன் உண்மையான காரணம் இதுதான்!..
இளையாராஜாவின் நடவடிக்கை பிடிக்காமல் அவரிடமிருந்து விலகிய இயக்குனர்களில் பாலச்சந்தர் முக்கியமானவர். இவர் மற்ற இயக்குனர்களை போல இளையராஜாவின் இசையை மட்டும் நம்பியே படம் எடுத்தவர் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஹீரோவவை நம்பியே அவர் படம் எடுக்க மாட்டார்.
முழுக்க முழுக்க தனது கதையை மட்டும் நம்பியே படம் எடுப்பார் அவர். துவக்கத்தில் இருந்தே பாலச்சந்தரின் படங்களுக்கு இசையமைத்து வந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். அன்னக்கிளி படத்தின் மூலம் பிரபலமாகி பல ஹிட் பாடல்களை கொடுத்து இளையராஜா பிரபலமான பின்னரும் பாலச்சந்தர் இளையராஜாவிடம் செல்லவில்லை.
இதையும் படிங்க: 12 வயலின்.. 10 ஆயிரம் சம்பளம்!.. இளையராஜா போட்ட கிளாசிக் பாடல்கள்!.. அட அந்த படமா?!…
இன்னும் சொல்லப்போனால் சில புதிய இசையமைப்பாளர்களை கூட தனது படத்தில் இசையமைக்க வைத்த பாலச்சந்தர் ராஜாவிடம் போகவில்லை. அதன்பின் கமல்ஹாசன் ராஜாவின் திறமை பற்றி பாலச்சந்தரிடம் சொல்லி ‘அவரை நீங்கள் பயன்படுத்துங்கள்’ என அவர் கூறிய பின் அவரின் இயக்கத்தில் 6 படங்கள் மட்டுமே இசையமைத்தார் இளையராஜா. இதில், சிந்து பைரவி முக்கியமான திரைப்படம்.
பாலச்சந்தரின் இயக்கத்தில் ரகுமான், கீதா ஆகியோர் நடித்து 1989ம் வருடம் வெளியான திரைப்படம்தான் புதுப்புது அர்த்தங்கள். இந்த படம் உருவான 1989ம் வருடம் இளையராஜா 33 படங்களுக்கு இசையமைத்தார். எனவே, இரவு பகலாக வேலை பார்த்து வந்தார். புதுப்புது அர்த்தங்கள் படம் தீபாவளி ரிலீஸ் என முடிவானது.
இதையும் படிங்க: ‘முடிஞ்சா எழுதிப்பாரு…’ பாடலாசிரியர்களுக்கு சவால் விட்ட இளையராஜா… அசத்திய வைரமுத்து
ஆனால், அதே தீபாவளிக்கு ரஜினியின் மாப்பிள்ளை, கமலின் வெற்றி விழா, விஜயகாந்தின் தர்மம் வெல்லும், சத்யராஜின் வாத்தியார் வீட்டுப்பிள்ளை ஆகிய படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. எனவே, புதுப்புது அர்த்தங்கள் படத்தின் சில காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்க ராஜாவுக்கு நேரம் கிடைக்கவில்லை.
இதனால் கோபமடைந்த பாலச்சந்தர் 3 காட்சிகளில் ஹிந்தியில் அவர் இயக்கிய ‘மரோசரித்திரா’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட இசையை ஒலிக்கவிட்டு படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். இதுதான் ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி ‘இனிமேல் பாலச்சந்தர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன்’ என சொல்லிவிட்டார். அதேபோல், பாலச்சந்தர் தயாரிப்பில் ரோஜா படம் உருவாகவிருந்த போது தன்னை பார்க்க வந்த மணிரத்தினத்தை ராஜா அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த பாலச்சந்தர் ஏ.ஆர்.ரஹ்மானை அப்படத்தில் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.