Cinema History
சாரிப்பா என்ன மன்னிச்சுடு… இரண்டு வருடம் கழித்து நடிகரிடம் மன்னிப்பு கேட்ட பாலச்சந்தர்!..
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலச்சந்தர். பாலச்சந்தர் சினிமாவிற்கு வந்த காலக்கட்டம் முதலே அவருக்கு வெகுவான வரவேற்பு இருந்தது. நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்து இவர் இயக்கிய சர்வர் சுந்தரம் திரைப்படம் அப்போதே பெரும் வரவேற்பை பெற்றது.
அதனையடுத்து கலர் சினிமா காலக்கட்டத்திலும் பாலச்சந்தர் பல படங்களை இயக்கியுள்ளார். முக்கியமாக கமல், ரஜினி போன்ற பெரிய நடிகர்களை வளர்த்துவிட்டவர் பாலச்சந்தர். பாலச்சந்தர் எந்த ஒரு நடிகரையும் பார்த்த முதல் பார்வையிலேயே அவருக்கு நடிக்கும் திறன் இருக்கிறதா என்பதை அறிந்துவிடுவார்.
இதுக்குறித்து பல நடிகர்களுமே பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தையை கூட அப்படிதான் கண்டறிந்தார் பாலச்சந்தர். சினிமா பயிற்சி பட்டறையில் நடிப்பு கற்று வந்த ரஜினிகாந்தை பாலச்சந்தர் பார்த்தவுடனேயே நல்ல நடிகன் என அறிந்துக்கொண்டார்.
மறக்காமல் மன்னிப்பு கேட்ட பாலச்சந்தர்:
இவ்வளவு பெரிய நடிகர்களை வளர்த்துவிட்ட போதிலும் மிகவும் அடக்கமானவர் பாலச்சந்தர். இதுக்குறித்து நடிகர் விதார்த் ஒரு சம்பவத்தை பகிர்ந்திருந்தார். ஒருமுறை பாலச்சந்தரை நேரில் சந்தித்துள்ளார் விதார்த். அப்போது அவர் கூத்து பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் நடிக்கும் நாடகத்திற்கு பாலச்சந்தரிடம் அழைப்பு விடுத்திருந்தார் விதார்த். ஆனால் பாலச்சந்தரால் அந்த நாடகத்திற்கு வர முடியவில்லை. பிறகு இரண்டு வருடம் கழித்து மீண்டும் ஒரு திருமணத்தில் பாலச்சந்தரை சந்தித்துள்ளார் விதார்த்.
அப்போது இரண்டு வருடத்திற்கு முன்பு நாடகத்திற்கு வர முடியாமல் போனதற்காக அப்போது மன்னிப்பு கேட்டுள்ளார் பாலச்சந்தர்.
இதையும் படிங்க:டோட்டல் வாஷ் அவுட்! 100 நாள் ஓட வேண்டிய படம்! தயாரிப்பாளரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த பார்த்திபன்