Director Balachander: தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக இருந்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இவர் இயக்கிய படங்களினால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய தாக்கமே ஏற்பட்டது. இவரிடம் ஆசிர்வாதம் வாங்கவே ஏராளமான தலைமுறைகள் காத்துக் கொண்டிருந்தனர்.
அந்தளவுக்கு ஒரு பெரிய ஜாம்பவானாக இருந்தார் பாலசந்தர். தமிழ் சினிமாவில் சாதித்த பல கலைஞர்கள் பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள். சினிமாவிற்குள் வருவதற்கு முன் நாடகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார் பாலசந்தர்.
இதையும் படிங்க: சூர்யாவை விட அஜித் எனக்கு ஸ்பெஷல்! அப்போ ஜோதிகாவுக்கு இதுலதான் interest போல
திரைத்துறையில் இவருக்கு என்று இன்றுவரை ஏன் சினிமா இருக்கும் வரை பாலசந்தரின் புகழும் இருந்து கொண்டுதான் இருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பெரிய பேசுப் பொருளாக இருப்பது விஜய் நடிக்கும் தளபதி 68 படத்திற்கான தலைப்பை பற்றித்தான்.
அந்தப் படத்தின் தலைப்பு ‘GOAT’ என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால் தலைப்பு எல்லாம் பெரிய விஷயமே இல்லை என ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் கூறினார்.
இதையும் படிங்க: இத இதத்தான் எதிர்பார்த்தோம்!.. இடுப்பு மடிப்பை காட்டி இழுக்கும் திவ்யா துரைசாமி..
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் ‘பீட்சா’. இப்படி ஒரு தலைப்பை கார்த்திக் சுப்பாராஜ் வைத்ததும் திரையுலகினரிலிருந்து அனைவரும் திட்டினார்களாம். மதுராந்தகம் கடந்து போய்விட்டால் அங்கு இருக்கும் கிராமத்திற்கு பீட்சா என்றாலே தெரியாது. அப்படி இருக்கும் போது எதுக்கு இந்த மாதிரி தலைப்பு? என கடுமையாக விமர்சித்தார்களாம்.
இன்னும் சிலர் இந்த தலைப்பை வைக்கவே பெரிய தைரியம் வேண்டும் என்று புகழ்ந்தார்களாம். ஆனால் பீட்சா படம் எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும். விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்த படமாக பீட்ஷா இருந்தது.
இதையும் படிங்க: மீனா-முத்துவை வெளியேத்த ரவுண்ட் கட்டிய விஜயா..! சிறகடிக்க ஆசையில் நடக்க இருக்கும் அடுத்த களேபரம்..!
அந்தப் படத்தின் விழாவின் போது கார்த்திக் சுப்பாராஜை மேடையில் அழைக்க உடனே பாலசந்தர் எழுந்து விட்டாராம். கார்த்திக் சுப்பாராஜை அழைத்து ‘இவர் பெரிய இடத்தை அடைவார். இந்த மாதிரி ஒரு தலைப்பை வைக்க பெரிய தைரியம் வேண்டும். நன்றாக வருவாய்’ என மனதார பாராட்டினாராம் பாலசந்தர்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…