நாகேஷுக்கெல்லாம் என்னால பாடமுடியாது! சொன்ன பாடகரை கே.பாலசந்தர் என்ன செய்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் இமயம் கே.பாலசந்தர். அதுவரை சினிமாவில் பழமைகளை பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு புதுமையை புகுத்திய பெருமை பாலசந்தரையே சேரும். ரஜினி , கமல் என இப்போது சினிமாவில் பல சாதனைகளை படைத்த பலரை அறிமுகப்படுத்திய பெருமையும் பாலசந்தரையே சேரும்.
எத்தனையோ பல நல்ல படங்களை கொடுத்த பாலசந்தர் முதன் முதலில் நீர்க்குமிழ் என்ற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதுவும் நாகேஷை ஹீரோவாக வைத்து அந்தப் படத்தை இயக்கினார். எல்லாருக்கும் முதல் படம் என்றாலே ஒரு வித வித்தியாசமான அனுபவங்கள் இருக்கும்.
அந்த வகையில் இந்தப் படத்திலும் பாலசந்தர் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார். இந்தப் படத்தில் மிகவும் பிரபலமான பாடல் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா’ என்ற பாடல். இந்தப் பாடலை படமாக்கிய போது படப்பிடிப்பு பாதியிலேயே நின்று விட்டதாம்.
ஏனெனில் பொருளாதார சிக்கலில் தவித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது அந்தப் பாடலை படமாக்கும் இடத்தில் இருந்த ஒருவர் பாலசந்தர் காதுபட ‘இது ஒரு படம். அந்தப் படத்திற்கு நீர்க்குமிழ் என்று வேற பேரு. அதில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற ஒரு சம்பந்தமில்லாத பாடல்’ என்று மிகவும் சலித்துக் கொண்டு பேசினாராம்.
உடனே பாலசந்தர் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான கே.வேலனிடம் இந்தப் படத்தின் பெயரை மாற்றிவிடலாமா? என்று கேட்டாராம். ஆனால் வேலன் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். மேலும் அப்போது பிரபலமாக இருந்த பாடகரை பாட அழைத்திருக்கிறார்கள்.
நாகேஷுக்காக பாட வேண்டும் என்று சொன்னதும் என்னது நாகேஷுக்கா? என்னால முடியாது என்று சொல்ல வேலன் அவரை சமாளித்து பாட அழைத்தாராம். ஆனால் கே.பாலசந்தரோ நாகேஷுக்காக பாட மாட்டேன் என்று சொன்னவர் எனக்கு வேண்டாம் என்று அந்த பாடகரை ஒதுக்கி விட்டாராம். அதன் பிறகு சீர்காழி கோவிந்தனை வைத்து பாட வைத்திருக்கிறார். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க : நீங்க இப்படி செய்யலாமா?!.. கடுப்பான சென்சார் போர்ட் அதிகாரி!.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நாகேஷ்…