உதவி இயக்குனராகத் தன்னை சேர்த்துக் கொள்ளத் தான் பாலசந்தர் கூப்பிடுறாருன்னு நினைச்சி அவசரம் அவசரமாக கமல் ஓடி வந்தாராம். ஆனால் நடந்ததோ வேறு. ஒருவர் நமக்கு நன்கு பரிட்சயமானவர் திடீர்னு என்ன ஏதுன்னு சொல்லாமலேயே கூப்பிடுகிறார் என்றால் நமக்குள் பலவிதமான கேள்விகள் எழும்.
Also read: சீனாவில் கிடைத்த அமோக வரவேற்பு!.. பலே பிளான் போட்ட மகாராஜா படக்குழு..
அதற்காகத் தான் கூப்பிடுகிறாரோ என்று நாமும் பலவாறாக நினைப்போம். ஆனால் நினைப்பது ஒன்று. நடப்பது ஒன்றாக இருக்கும். இந்த சம்பவமும் அப்படிப்பட்டதுதான். வாங்க என்னன்னு பார்ப்போம்.
எட்டிப் பார்த்த கமல்
அப்படி இருந்தும் கமல் நான் உதவி இயக்குனராகத் தான் வந்தேன் என்றாராம். ஆனால் அவரோ இந்தப் படத்தில் உன்னை நடிக்கத் தான் கூப்பிட்டேன் கறாராக சொன்னாராம் பாலசந்தர். அப்போது கமலுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தற்செயலாக வெளியே எட்டிப் பார்த்துள்ளார்.
அங்கு ஏகப்பட்ட இளைஞர்கள் பாலசந்தரோட தரிசனம் கிடைக்காதா என வாய்ப்புக்காகக் காத்திருந்தார்களாம். அப்போது கமலின் மனசாட்சி ஒன்றை சொன்னதாம். இப்போ இந்த சான்ஸை விட்டா உனக்கு நடிக்கவும் வாய்ப்பு கிடைக்காது. பாலசந்தரை இனிமே சந்திக்கவும் வாய்ப்பு கிடைக்காது என்று.
அரங்கேற்றம்
உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம் கமல். அரங்கேற்றம் படத்தில் பிரமிளாவின் தம்பியாக நடிக்க வாய்ப்பு வந்தது. படப்பிடிப்பின் போது கமல் காட்டிய முகபாவங்கள் பாலசந்தரை ஆச்சரியப்பட வைத்தன. அவர் சொல்லாத பாவனைகளைக் கூட காட்டி அசத்தினாராம். கமலின் அந்த செய்கைகள் பாலசந்தரைப் பெரிதும் கவர்ந்தது.
பெரிய ஸ்பார்க்
அதனால் அரங்கேற்றம் படத்தின் கிளைமாக்ஸ்ல கமலுக்காகவே ஒரு காட்சியை வைத்தாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தனது உதவியாளரும் நண்பருமான அனந்துவிடம் இந்தப் பையன்கிட்ட பெரிய ஸ்பார்க் இருக்கு. நிச்சயமா இவன் பெரிய ஆளா வருவான்னு சொன்னாராம். அரங்கேற்றம் படம் வெளியான சில நாள்களிலேயே கமல் அவரை சந்திக்க வந்தார்.
நல்ல வாய்ப்பு
அப்போது வெறும் 500 தான் எனக்கு சம்பளமா என அவரிடம் கோபத்தில் கேட்டாராம். இது சோதனை முயற்சி தான். இனி வரும் படங்கள்ல நல்ல வாய்ப்பு உனக்கு கிடைக்கும். நீ அற்புதமா நடிச்சிருக்கன்னு எல்லாரும் சொல்றாங்கன்னாரு. அதைக் கேட்டதும் கமல் அமைதியாகத் திரும்பினார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
Also read: நிஜமான ஹீரோன்னா சமுத்திரக்கனிதான்… எவ்ளோ பெரிய மனசுன்னு பாருங்க..!
1973ல் பாலசந்தர் இயக்கிய படம் அரங்கேற்றம். சிவகுமார், பிரமிளா, சசிகுமார், எம்என்.ராஜம், ஜெயசித்ரா, எஸ்.வி.சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர். வி.குமார் இசை அமைத்துள்ளார். கமல் வாலிபன் ஆனதும் வெளியான முதல் படம் இதுதான். இதற்கு முன் அவர் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி வந்தார்.
ரஜினியின் இயற்பெயர்…
அமீர், சூர்யா,…
நடிகர் சூர்யா…
தமிழ் சினிமாவில்…
நடிகர் ரஜினிகாந்தின்…