Cinema History
தமிழ்ப்படங்களில் அதிக முறை தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் யார் தெரியுமா?
தேசிய விருது முதலில் எத்தனை படங்களுக்குக் கொடுக்கப்பட்டது? அதிக முறை தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குனர் யார் என்று பார்க்கலாமா…
1954ல் ராமுலுநாயுடு இயக்கிய மலைக்கள்ளன் தான் முதல் ஜனாதிபதி விருதைப் பெற்ற படம். இது குடியரசுத்தலைவரின் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது.
ஏவிஎம்மின் அந்தநாள் படத்தை பாலசந்தர் இயக்கினார். 2வது சிறந்த படத்திற்கான தகுதிச்சான்றையும், நாராயணமூர்த்தி இயக்கிய எதிர்பாராதது 3வது சிறந்த படத்திற்கான தகுதிச்சான்றிதழையும் பெற்றது.
ஆரம்பத்தில் இந்த விருதை 3 படங்களுக்குக் கொடுத்தனர். முதலாவதா வர்ற படத்திற்கு வெள்ளிப்பதக்கம் கொடுத்தாங்க. 1967ல் நடந்த 15வது தேசிய விருது வழங்கும் விழாவில் இருந்து 2 திரைப்படத்தை நிறுத்தி 1 படத்திற்கு மட்டும் தேசிய விருது கொடுத்தாங்க.
நாராயண மூர்த்தியின் இயக்கத்தில் வெளியான எதிர்பாராதது, அன்னையின் ஆணை படங்களுக்கு 3வது சிறந்த படத்துக்கான தகுதிச்சான்று வழங்கப்பட்டது. ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப் பரிசுக்கு 3வது இடத்துக்குரிய தகுதிச்சான்று கிடைத்தது. அவர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. ஏ.பி.நாகராஜன் இயக்கிய திருவிளையாடல் படத்துக்கு 2வது சிறந்த படத்துக்கான தகுதிச்சான்றும், அவரது தில்லானா மோகனாம்பாள் படத்துக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்தது.
ஏ.சி.திருலோகசந்தரின் நானும் ஒரு பெண் படம் ஜனாதிபதியின் வெள்ளித்தாமரை விருதைப் பெற்றது. அவரது ராமு படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. பி.மாதவன் இயக்கிய ராமன் எத்தனை ராமனடி படம், பட்டிக்காடா பட்டணமா படமும் தேசிய விருதைப் பெற்றது. பாரதிராஜாவின் முதல் மரியாதை, அந்திமந்தாரை தேசிய விருதைப் பெற்றது. பாலுமகேந்திரா இயக்கிய வீடு, வண்ண வண்ண பூக்கள் படம் தேசிய விருதைப் பெற்றது. பார்த்திபன் இயக்கிய புதிய பாதை, ஹவுஸ்புல் படங்கள் தேசிய விருதைப் பெற்றன. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கிய தி டெரரிஸ்ட், நவரசா படமும் தேசிய விருதைப் பெற்றது.
ஞானராஜசேகரன் இயக்கிய பாரதி, பெரியார் படங்கள் தேசிய விருதைப் பெற்றன. வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, அசுரன் படங்கள் தேசிய விருதைப் பெற்றன. பி.ஆர்.பந்துலு இயக்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் 2வது இடமும், கப்பலோட்டிய தமிழன் வெள்ளித்தாமரை விருதும், கர்ணன் 3வது சிறந்த பட விருதும் பெற்றது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சாரதா 3வது பட விருதும், கற்பகம் 2வது பட விருதும், கை கொடுத்த தெய்வம் படம் வெள்ளித்தாமரை விருதும் பெற்றது. மணிரத்னம் இயக்கிய மௌனராகம், அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் தேசிய விருதைப் பெற்றவை. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய குல தெய்வம் சிறந்த பட தேசிய விருதும், அன்னை 2வது பட விருதும், சர்வர் சுந்தரம் 3வது பட விருதும், குழந்தையும் தெய்வமும் படம் வெள்ளித்தாமரை விருதையும் பெற்றன.
ஏ.பீம்சிங் இயக்கிய பாகப்பிரிவினை வெள்ளித்தாமரை விருதும், களத்தூர் கண்ணம்மா 3வது பட விருதும், பாசமலர் 2வது பட விருதும், பழநி படம் 2வது பட விருதும் பெற்றது. தொடர்ந்து 3 முறை வாங்கியது ஏ.பீம்சிங், கோபாலகிருஷ்ணன் தான். பாலசந்தர் 4 முறை தேசிய விருது பெற்றார். இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை படங்கள் தான் அவை. ருத்ர வீணா என்ற படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது.
இவர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் பிற சமூக பிரச்சனைகளுக்கான தேசிய விருதைப் பெற்றது. தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றவரும் இவர் தான். 9 தேசிய விருதுகளைப் பெற்றவரும் இவர் தான். இவர் இயக்கிய, தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு இருவாசல், ரோஜா, அந்தநாள் ஆகிய படங்கள் தான் அவை.