பாலசந்தர் பொழப்புல மண்ணை அள்ளி போட்ட எம்.ஜி.ஆர்...! இயக்குனர் எடுத்த அதிரடியான முடிவு...
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பெருமை இயக்குனர் சிகரம் பாலசந்தர் என அனைவருக்கும் தெரியும். இவரை பற்றிய தெரியாத சில தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இவரும் நடிகர் நாகேஷும் இணைபிரியாத நண்பர்களாக இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 10வருட கால நட்பு. நாகேஷை வைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நாகேஷை நடிக்க வைத்து அழகு பார்ப்பவர் பாலசந்தர்.
ஒரு சமயம் ஜெமினி கணேசன் நடிப்பில் வெள்ளிவிழா என்ற படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் பாலசந்தர். அந்த படத்திற்கு நாகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 20 நாள்களுக்கு முன்பாகவே கால்ஷீட் வாங்கியிருக்கிறாராம் பாலசந்தர். அன்று படப்பிடிப்பு சமயம் காலையில் இருந்து இரவு வரை எல்லா ஆர்டிஸ்ட்டும் வந்த நிலையில் நாகேஷ் மட்டும் வரவில்லையாம்.
இதையும் படிங்கள் : விக்ரமின் இரு மெகா ஹிட் படங்கள்…! வாய்ப்புகளை பயன்படுத்த தவறிய விஜய், அஜித்…
பொருத்து பார்த்த பாலசந்தர் நாகேஷ் வீட்டுக்கு ஆளை அனுப்பி நிலவரத்தை அறிய முற்பட்டிருக்கிறார். போனவர் அதிர்ச்சியான தகவலை சொல்லியிருக்கிறார் பாலசந்தரிடம். நாகேஷ் எம்.ஜி.ஆர் பட சூட்டிங்கிற்கு சென்று விட்டாராம். அதுவும் இல்லாமல் அவர் சொன்ன விஷயம் தான் மேலும் கவலைக்குரியதாகி விட்டது பாலசந்தருக்கு. நாகேஷை வந்து அழைத்து போனது எம்.ஜி.ஆர் பட இயக்குனராம். இதை பாலசந்தர் அனுப்பிய ஆளிடம் நாகேஷ், என்னை அழைத்துப் போக அந்த பட இயக்குனரே வந்திருக்கிறார்.
நான் எங்கு போகட்டும் என கேட்டிருக்கிறார். இதை அப்படியே அந்த ஆள் பாலசந்தரிடம் சொல்ல அப்போ நான் வந்து அழைத்து போக வேண்டும் என நினைக்கிறானா என்று பாலசந்தர் கோபத்துடன் கேட்டாராம். கொஞ்ச நேரம் மயான அமைதியாய் இருந்த படப்பிடிப்பை அன்று ரத்து செய்து விட்டு நாளை மறுபடியும் படப்பிடிப்பு நடக்கும். ஆனால் நடிக்க போவது நாகேஷ் இல்லை.தேங்காய் சீனிவாசன் என்று சொல்லி இனிமேல் என்னையும் நாகேஷையும் சேர்த்து வைக்க வேண்டும் என யாரும் முயற்சி செய்யாதீர்கள் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டாராம் பாலசந்தர். கிட்டத்தட்ட 10 வருட நட்பு அந்த நிகழ்விற்கு பிறகு சிதைந்து போனது என்றே கூறலாம்.