பாலசந்தர் பாராட்டுவார்னு நினைச்சேன் - ஆனா இப்படி ஆகிப்போச்சு! நெப்போலியன் பகிர்ந்த ரகசியம்

by Rohini |
bala
X

bala

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகமானவர்கள் ஏராளம். கிட்டத்தட்ட எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்றைய தலமுறை நடிகர்கள் பலருடனும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தவர் பாலசந்தர். இன்று சினிமாவில் கொடிகட்டி பறக்கும் எத்தனை எத்தனையோ பிரபலங்களை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக பாலசந்தர் திகழ்கிறார்.

மேலும் படப்பிடிப்பில் மிகவும் கறாராக இருக்க கூடியவரும் ஆவார். ரஜினி, கமலையே பந்தாடிய மாபெரும் இயக்குனர்தான் இவர். இந்த நிலையில் பாலசந்தரை பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நடிகர் நெப்போலியன் ஒரு பேட்டியின் மூலம் கூறினார்.

bala1

nepolean

அதாவது நெப்போலியன் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர். ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். அந்தப் படத்தின் சமயத்தில் நெப்போலியனுக்கு வயது 22. ஆனால் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரமோ 60 வயது மதிக்கத்தக்க பண்ணையார் கதாபாத்திரம்.

அந்தப் படத்தை பார்ப்பதற்காக பாலசந்தரை பாரதிராஜா அழைத்திருந்தார். அப்போது அந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் வந்திருந்தனர். பாலசந்தர் படத்தை பார்த்து விட்டு ஒவ்வொருவரையும் பாராட்டிக் கொண்டே வந்தாராம். நெப்போலியனும் நின்று கொண்டிருந்தாராம்.

bala2

bala2

ஆனால் அவரை பார்த்துவிட்டு அப்படியே போய்விட்டாராம் பாலசந்தர். இதனால் நெப்போலியன் ஒருவேளை நம் நடிப்பு அவருக்கு பிடிக்க வில்லையோ என்று யோசித்தாராம். உடனே பாரதிராஜா பாலசந்தரிடம் நெப்போலியனை சுட்டிக் காட்டி ‘இவர் தான் அந்த பண்ணையார் கதாபாத்திரத்தில் நடித்தவர்’என்று கூறியிருக்கிறார்.

அதை கேட்டதும் பாலசந்தர் அப்படியா என்று ஆச்சரியப்பட்டு மிகவும் பிரமிப்பாக தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தினாராம் பாலசந்தர். வயதான தோற்றத்தில் படத்தில் பார்த்துவிட்டு நேரிடையாக நெப்போலியனை அடையாளம் காணாமல் சென்றிருக்கிறார் பாலசந்தர். இதை அந்த பேட்டியில் நெப்போலியன் மிகவும் உணர்வுப்பூர்வமாக கூறினார்.

Next Story